Friday, 12 October 2012

சிறுகதை : 'பொந்தியானாக் புன்னகை!'

சிறுகதை : 'பொந்தியானாக் புன்னகை!'

இருள் கப்பிக் கொண்ட இரவு பதினொரு மணி.  சலசலத்துப் பெய்து கொண்டிருந்த மழை, வீதியில் ஆட்களை நடமாட விடவில்லை.  சாலையோரத்து 'சோடியம்' விளக்குகள் சோகமாக ஒளி சிந்த, இடி இடித்து மின்னல் தெறித்துக் கொண்டிருந்தது!

அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அசைந்து அசைந்து துடைத்து விடும் 'வைப்பரின்' துணையோடு சாலையில் பெருகி ஓடிய மழை நீரை கிழித்துக்கொண்டு அந்த நீல நிற 'புரோட்டோன் வீரா' பறந்து கொண்டிருந்தது.

அந்தக் 'காரி'னுள் மூன்று பேர்; கணேஷ், மதுமிதா மற்றும் அவர்களின் அன்பான தாம்பத்தியத்தின் அடையாளமான ஒரு வயது நிஷா.

மறுநாள் காலை நடைபெற இருந்த உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் சரியான நேரத்திற்குப் போய்ச் சேர்ந்துவிட முடியுமா என்ற கவலையோடு கணேஷ் சாலையில் கண் பதித்திருந்தான்.  மதுமிதாவின் மடியிலிருந்த குழந்தை நிஷா, அம்மா முகம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்ததை அடிக்கடி கடந்துசெல்லும் சாலையோர விளக்குகளின் வெளிச்சத்தில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

ஏனென்று புரிந்துகொள்ள முடியாமல் கணேஷின் மனதில் ஏதேதோ சிந்தனைகள் தறிக்கெட்டு ஓடிக்கொண்டிருந்தது!

'ஏன்?  என்னவாயிற்று எனக்கு?  எந்தக் காரணமும் இல்லாமல் எதற்கு என்னுள் குழப்பம்?'  இன்னும் குழம்பியவனாக காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.  ஏதோ ஒரு துஷ்ட சக்தி தன்னைப் பிசைந்து கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது!

அவனது மனக் குழப்பத்தை வாசித்து விட்டவளாக மதுமிதா கேட்டாள்... "ஏங்க!  ஒரு மாதிரியா இருக்கீங்க?"

கணேஷ் ஒரு கையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு பின்இருக்கையில் அமர்ந்திருந்த அவளைத் திரும்பிப் பார்த்தான்.  அப்படியே ஓரமாய் காரை நிறுத்திவிட்டு, பரிவாக அவளது தலைமுடியைக் கோதிவிட வேண்டுமென்ற எண்ணம் வந்தது.  குழந்தை நிஷாவை முத்தமிட வேண்டுமென்ற ஆசை வந்தது.

"ஒண்ணுமில்லை" என்றான்.

"பொய் சொல்றீங்க.  உங்க முகத்தில் வழக்கமாக இருக்கிற சந்தோஷத்தைக் காணோம்."

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கணேஷ், "ஏன்னு தெரியல மது, ஏதோ நெஞ்சை அடைக்கிற மாதிரி இருக்கு.  ஏதோ ஒரு சக்தி என்னைப் போட்டு அமுக்குற மாதிரி இருக்கு..."

மதுமிதா பயந்து போனாள்!  "உடம்பு சரியில்லைன்னா திரும்பிப் போயிடலாங்க, கல்யாணத்துக்குப் போகவேண்டாம்!"

"ச்சே... உடம்புக்கு ஒண்ணுமில்லை... மனசுதான் ஏதோ செய்யுது..."

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே கார் ஈப்போ நகர எல்லையை விட்டு பினாங்கை நோக்கி வெகுதூரம் வந்துவிட்டது.

சாலையில் விளக்குகள் இல்லாத இருட்டு.  எதிரில் வந்த வாகனங்களின் 'ஹெட் லைட்டுகள்' மட்டும் அவ்வப்பொழுது பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.  மழை நின்றபாடில்லை!

'இந்தப் பயணத்திற்குப் பழைய சாலையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமே' என்று நினைத்த கணேஷ், மணியைப் பார்த்தான்.  ஏறக்குறைய ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் அவனுக்கு மறந்திருந்த 'அந்த' விஷயம் சட்'டென்று ஞாபகத்திற்கு வந்தது!  இன்னும் சற்று நேரத்தில் பிரசித்திபெற்ற 'பொந்தியானாக் டணல்' வந்துவிடும்!

அந்த நினைப்பு அவன் அடிவயிறை சில்லிட வைத்தது!

பின்னால் திரும்பி, "இன்னும் கொஞ்ச நேரத்தில் 'அது' வந்திடும்" என்றான் கணேஷ்.

"எதைச் சொல்றீங்க?"

"இல்ல... இன்னும் பத்து நிமிடத்துல ஒரு பழைய 'டணல்' வரும். ஏறக்குறைய ஐம்பது மீட்டர் நீளம்.  பெரும்பாலும் விளக்கே இருக்காது, இருட்டா இருக்கும்."

"இருக்கட்டுமே...நாம 'கார்'ல இல்ல போறோம்?"

"உனக்குத் தெரியாது மது... அந்த 'டணல்'ல 'பொந்தியானாக்' இருக்கிறதை நிறையப் பேர் பார்த்திருக்காங்க.  அகோரப் பசியோட சுத்திவர்ற 'பொந்தியானாக்' ஆம்பளைங்க கிடைச்சா அடிச்சி, ரத்தத்தை உறிஞ்சிடுமாம்.  அதுங்கதான் 'டணல்'ல எரியுற விளக்கை எல்லாம் அடிக்கடி எரியாம ஆக்கிடுமாம்!  என்னோட கூட்டாளிங்க இதைப் பத்தி நிறைய சொல்லியிருக்காங்க..."

கணேஷ் இப்படிச் சொன்னதும், மதுமிதா பளீர் என சிரித்தாள்.  அந்தச் சிரிப்பு அவனது ரத்தத்தில் 'ஐஸ்' கட்டிகளை ஏற்றியது!

"என்னங்க நீங்க... நாட்டிலேயே 'நம்பர் ஒன் ஃப்புட்பால் பிளேயர்' நீங்க.  பல பேர் உங்களைப் பார்த்து பயப்படறாங்க.  நீங்களோ பார்க்காத 'பொந்தியானாக்'கை நினைச்சு பயந்துக்கிட்டிருக்கீங்க..." என்றாள் கிண்டலாக.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே 'கார்' மெல்ல...மெல்ல... 'அந்த' இருட்டுக் குகையை நெருங்கிக் கொண்டிருந்தது!  மழையின் சீற்றம் குறைந்தபாடில்லை.

குழந்தை நிஷா ஆழ்ந்து உறங்கி விட்டிருந்தாள்.

'காரின் ஹெட் லைட்' வெளிச்சத்தில் 'டணலின்' முகப்பு தெரிய ஆரம்பித்தது!

கணேஷின் மனதில் ஏதோ ஒரு குரல், 'திரும்பிப் போ... திரும்பிப் போ' என்று அலறியது!

'போகலாமா?.. வேண்டாமா?..' மனப் போராட்டத்தோடு கணேஷ் கொஞ்சம் கொஞ்சமாக, மெதுவாக 'காரை டணலு'க்குள் செலுத்திக் கொண்டிருந்தான்!

சுமார் இருபது மீட்டர் தூரம் போயிருக்கும்.

ஏதோ ஒரு விசையால் பிடித்து இழுத்து நிறுத்தப்பட்ட மாதிரி, 'கார்' படக்'கென நின்றது!  கணேஷின் மூளைவரை ஒரு சில்லிப்பு சர்ர்ரென பாய்ந்தது!  அவசரமாக சாவியைத் திருகினான்.

'க்க்க்கும்...க்க்க்கும்...' 'கார்' கிளம்ப மறுத்து முரண்டியது.  'ஹெட் லைட்'டும் அணைந்துபோக, 'காரை'ச் சுற்றி கனத்த இருள்!

மதுமிதா, "என்னங்க ஆச்சு?" என்றாள் படபடப்பாக!

"தெரியல மது, 'கார்' மறுபடியும் 'ஸ்டார்ட்' ஆக மாட்டேங்குது" என்றவன் ஒரு நிமிடம் யோசித்து, "நீ குழந்தையை பார்த்துக்க, நான் 'காரை' கொஞ்சம் 'செக்' செஞ்சுக்கிறேன்..." என்று சொல்லிவிட்டு, 'டார்ச் லைட்'டுடன் கதவு திறந்து வெளியே வந்தான்.

ஏதோ ஒரு பூ'வின் மயக்க வாசம் அவன் நாசிகளைத் தாக்கியது!  சுற்றிலும் பார்வையை சுழலவிட்டபடி, முன் பக்கம் போய் 'போனட்'டை திறந்தான், குனிந்தான், மதுமிதாவின் பார்வையிலிருந்து மறைந்து போனான்!

'வீ....ல்ல்ல்...' என்று குழந்தை நிஷாவின் அழுகை குரல் பொங்கிக் கிளம்பியது!  ஒரு நிமிடம் திடுக்கிட்ட மதுமிதா இருளில் குழந்தையைப் பார்க்க முடியாமல் தடுமாறினாள்.  விழி திறக்காமல் குழந்தை வீறிட்டு அழுவதை தன் கைகளின் ஸ்பரிசத்தால் உணர்ந்தாள்!  'காங்கையின் காரணமாக அழுகிறதோ?...  எனக்கே உஷ்ணம் தாங்க முடியவில்லையே...' என நினைத்துக் கொண்டாள்.

எவ்வளவு சமாதானம் செய்தும், பாலூட்ட முற்பட்டும் அதன் அழுகை நிற்கவேயில்லை!  முன் பக்கம் 'போனட்'டில் குனிந்திருந்த கணேஷ் தலை நிமிரவேயில்லை!

ஒன்று...இரண்டு...மூன்று...பத்து நிமிடமாயிற்று.  கணேஷிடமிருந்து அரவமேயில்லை!  சட்டென்று பதற்றம் தொற்றிக் கொள்ள, 'என்னவாச்சு இவருக்கு?' என்று யோசித்தவள், கீழிறங்க முற்பட...

பின்னால் ஒரு 'காரின் ஹெட் லைட்' வெளிச்சம் உயிர் பெற்று, கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து, மெதுவாகி, தயங்கி திடீரென ஆவேசமாகி வேகமெடுத்தது!

மதுமிதா ஒன்றும் புரியாதவளாக அந்தக் 'காரை'ப் பார்த்தாள்.  அது ஒரு 'போலீஸ்  வாகனம்.  'டணலில்' இயக்கமுடியாமல் கிடக்கும் 'காரு'க்கு வந்து உதவாமல் பேயாய்ப் பறக்கும் போலீசின் நடவடிக்கையைக் கண்டு சினந்தாள் மதுமிதா!  உயிர் பதைக்கப் பறந்த 'போலீஸ் கார்' 'டணல்' முடிவைத் தாண்டி 'சடன் பிரேக்' போட்டு நின்றது.

மதுமிதா அதை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாள் - கையில் வீறிட்டு அழும் குழந்தையுடன்!  'டணலி'னுள் வெப்பக் காற்றுவேறு வியர்வையை வெளிக்கொணர வைத்து அவளை சஞ்சலப்படுத்தியது!

நின்ற 'போலீஸ் காரிலிருந்து ஒரு உருவம் கையில் 'மெகாஃபோனோடு' காரின் ஜன்னல்வழி நீட்டியது, சக்திமிக்க விளக்கொளியைக் காட்டியபடி, பேசத் துவங்கியது.

"பெண்ணே... நாங்கள் போலீஸ்... நீ மிகப் பெரிய ஆபத்தில் இருக்கிறாய்!  நாங்கள் சொல்வதைக் கேள்!  உடனே உன் காரின் கதவைத் திறந்து குழந்தையை எடுத்துக்கொண்டு, திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்துவிடு..." மலாய் மொழியில் பதட்டமாய் ஒலித்தது அந்தக் குரல்!

மதுமிதாவிற்கு தான் ஆபத்திலிருப்பது புரிந்துவிட்டது!  பய உணர்வு உந்தித் தள்ள, கதவைத் திறந்து, குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு, போலீசை நோக்கி ஓடத் துவங்கினாள்.  அவர்களை மிக அருகில் நெருங்கும்போதுதான் ஞாபகம் வந்தது...  'கணேஷ்?..'

திரும்பிய அவளது கண்களில்...

நாலைந்து கறுப்பு 'பொந்தியானாக்'குகள் கணேஷின் தலையைப் பிய்த்து, சுவைக்கத் துவங்கியிருந்ததும், ஓரமாய் அவனது முண்டம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதும் பட்டுவிட...

"ஓ..ஓ..ஓ.." என்ற அலறலோடு மயங்கி சாய்ந்தாள் மதுமிதா!


                                     *** முற்றும் ***

Thursday, 11 October 2012

விடியலை எழுப்பிவிடு!

விடியலை எழுப்பிவிடு!

நிலவு வந்தவிதமும்
தெரியவில்லை
நின்ற இடமும்
தெரியவில்லை
சென்ற சுவடும்
தெரியவில்லை!

படுக்கைக்குச் செல்லுமுன்

நன்றாகக் குறி
வைத்துத்தானே சென்றேன்...!
எப்படி நகர்ந்தது?
ஏன் நகர்ந்தது?

ஓ... நானும்
நகர வேண்டும்...
அதைத்தான்
சொல்லாமல்
சொல்கிறதோ...?

"இல்லையேல் செத்த
பிணம்போல்..."
என்று உவமை
கூறிவிடுவார்களோ...!
ஆணி அடித்துத்
தொங்கவிட்டு விடுவார்களோ
சுவற்றில்...!

அதென்ன 'செத்த பிணம்'...?
செத்த பிறகுதானே
பிணம்!
'பிணம்' என்று
சொல்வதுதானே
உத்தமம்...!

அதோ...
கதிரவன்
தன் கண்சிமிட்டி
கதிர்களைப் பாய்ச்ச
வந்துவிட்டான்...!

பூமியில்
கதிர்கள் செழிக்க
அவன்தானே
காரணம்...!
அதனால்தானோ
'கதிரவன்' என்ற
காரணப் பெயர்
கொண்டான்...?
இருக்கும்.. இருக்கும்

அடடா...
நினைத்துப் பார்ப்பதற்குள்
கிழக்கின் கீழே
பார்த்த பகலவன்
அதோ...
மேற்கு நோக்கி
எழுகிறான்...
பகல்-அவன்
எழு-கதிர்
ஆஹா...

குறி வைத்த
இடத்திலிருந்து
நிலா சென்றதெங்கே
என்று தேடினேன்...
"அதுவும் என்னைப்போல்
சுறுசுறுப்பாக
நகர்ந்துவிட்டது"
என்று சூடாகச்
சொன்னது சூரியன்.

ஓஹோ...
இனி பிரபஞ்சத்தின்
வேகம்போல்
நானும் செயல்பட
வேண்டும்போலும்!
ஜடப்பொருள்கள்
மட்டும்தான் நகரா...!
பிணமா நான்...?

புயலாய் வேண்டாம்...
தென்றலாய்
உலா வரலாமே...
இதோ நாளைமுதல்
நானே விடியலை
எழுப்புகிறேன்!

Wednesday, 10 October 2012

யாருக்கு யாரைப் புரிகிறது?

யாருக்கு யாரைப் புரிகிறது?

சொல்வதெல்லாம் சரியென்றால் இனிக்கிறது
சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமாய் நடக்கிறது
பொய் என்று தெரிந்தாலும் சகிக்கிறது
பேச்சுக்குத் தலையாட்டித் தொலைக்கிறது

பெற்ற பிள்ளைக்குத்தான் புரியவில்லை
பெற்றவளும் உற்றவனை அறியவில்லை
கற்ற அனுபவங்கள் வந்து நிற்கிறது
கொண்ட அக்கறையால் எடுத்துரைக்கிறது

உற்ற அறிவை உணர்ச்சி வெல்கிறது
உற்றவர் பெற்றவர் பாசம் மறைகிறது
கற்றுக் குட்டியாய் பாசத்தை மிதிக்கிறது
கொண்ட பாசம் தந்தையை வருத்துகிறது

யாருக்கு யாரைப் புரிகிறது?
புரிந்தும் என்ன ஆகப் போகிறது?
பேருக்குப் பேச்செல்லாம் இருக்கிறது
போனால் போகட்டும் என்றாகிறது!

என்ன சொல்லி என்ன பயன் ஆகப்போகிறது?
இந்தத் தலைமுறைக்குச் சொல்லியா விளங்கப் போகிறது?
மண்ணில் வாழ ஒழுங்குமுறை இருக்கிறது
மனம்போல் வாழ்வதென்றால் இனிக்கிறது!

"அங்கம் தங்கம்தானா...!"

"அங்கம் தங்கம்தானா...!"

"அன்பே... நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்..."
அவள் அவனிடம் கூறியவாறே தன் ஆடைகளைக் கலைய முற்பட்டாள்!

"உண்மையில் உங்களைத்தவிர இந்த உலகில் வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை..."
"அன்பே... நீங்கள் என்னிடம் மிகுந்த அன்பு பாராட்டுகிறீர்கள். பஞ்சு போன்ற உங்களின் மென்மையான, கனிவான, இனிப்பான பேசசு..." பேசிக்கொண்டே தனது முழுக்காற்சட்டையையும் உருவிப் போட்டாள்!

வாழைத்தண்டுபோன்ற தன் கால்களிலிருந்து காலுறைகளைக் கழற்றி தூக்குச் சப்பாத்தினுள் திணித்தவாறே..., "மன்னவா! நிச்சயமாகச் சொல்கிறேன்... என் துணையால் ஒருபோதும் நீங்கள் விசனப்படமாட்டீர்கள்."

"டார்லிங்... நான் உங்கள்மீது வெறித்தனமான காதல் கொண்டுள்ளேன்! என் காதல் பவித்ரமானது, பரிசுத்தமானது. என் அரவணைப்பால், நீங்களே திக்குமுக்காடிப்போவீர்கள்! இதைவிட உங்களுக்கு நான் இன்னும் என்ன தரவேண்டும்?..." அவள் தன் உள்ளாடையை இலகுவாக நீக்கித் தூக்கி தூர எறிந்தாள்!

"நினைவு கொள்ளுங்கள், நான் உங்களுக்கே சொந்தமானவள்... உங்களுக்கு மட்டும் சொந்தமானவள். என் தேகச்சூடு வெளிக்கொணரும் உஷ்ணமூச்சு உங்கள் ஒருவருக்கே... உயிரே, இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். நான் உங்கள் ஒருவருக்கே உரியவள்...! என்று ஈனஸ்வரத்தில் முணகியவாறே, "குட் நைட் டியர்..." என்று சொல்லி தொலைப்பேசித் தொடர்பை நிறுத்திக்கொண்டு படுக்கைக்குச் சென்றாள்.

Thursday, 4 October 2012

சிறுகதை : "கலைத்தாயின் சீற்றம்"

இந்தக் கதை 26.8.2012  ஞாயிற்றுக்கிழமை நம் நாடு  பத்திரிகையில் பிரசுரமானது.

சிறுகதை : "கலைத்தாயின் சீற்றம்" 
                 படைப்பு : பாலகோபாலன் நம்பியார்

லைகளின் தாயாக இருக்கும் கலைவாணி மௌனமாக சிந்தனையில்
ஆழ்ந்திருந்தாள். அது அவளின் தனித்துவ உலகம். அங்கு கலைகுறித்த
எண்ணங்களே பரிமாறப்பட்டு வந்தன. இங்கு, உலகைப் படைக்கின்ற
தொழிலில் இருக்கும் பிரம்மனுக்கு வேலையே இல்லை! இது கலைத்தாய்
தனக்காக உருவாக்கிய உலகம். இங்கு கற்றவர்கள், கவிஞர்கள், புலவர்களின்
நினைவும் அவர்களின் வருகையும் மட்டுமே இருக்கும். அவளுக்கு
உதவியாக பல பெண்கள் இருந்தார்கள். அவர்கள் கலைவாணியின்
உத்தரவை செயல்படுத்துவார்கள். அவள் எப்போது மௌனம் கலைந்து
சிந்தனையிலிருந்து விலகிப் பேசுவாள் எனக் காத்திருந்தார்கள். ஆனால்,
கலைவாணியின் மௌனம் தொடர்ந்தது...

அந்நேரத்தில், அந்தக் கலையுலக வாயிலிலிருந்து ஒருபெண் வந்தாள்.
அவள் கலைவாணியின் அருகில் சென்று மிக மெதுவாய்ச் சொன்னாள்...
"தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரன், தேவியைச் சந்திக்க
வருகிறார்!"

நக்கீரன் போன்ற புலவர்களுக்கு கலைஉலகில் எப்போது வேண்டுமானாலும்
வருவதற்கு தேவி அனுமதி கொடுத்திருப்பது அந்தப் பெண்ணுக்குத்
தெரியும்என்றாலும், அவள் கலைதேவியின் திருமுகத்தைப் பார்த்தபடி
நின்றுகொண்டிருந்தாள்.

கலைதேவியின் இமைகள் படபடத்தனஅவள் மௌனமாக இருந்தாலும்,
இந்தப் பிரபஞ்சத்தில் என்ன நடக்கிறதென்று அவளுக்குத் தெரியும்
என்றாலும் சிலவேளைகளில் அதற்கு மாறான நிலையில் நடந்துகொள்வாள்.

"தேவி..." என்றாள்.

"ம்..."

"தங்களைக்காண தலைமைப் புலவர் நக்கீரர் வருகிறார்!"

"அப்படியா?.." கலைவாணியின் உதடுகள் பிரிந்தன"அவரை மிகுந்த
மாண்போடு அழைத்து வா, அவரோடு நிறைய பேசவேண்டும்."

அந்தப் பெண் யோசித்தாள், 'புலவரே கலைவாணியோடு பேசவேண்டும்
என்று வருகிறார்; ஆனால், அவரோடு கலைவாணிக்குப் பேச என்ன
இருக்கிறது?..  கலைவாணிதானே எல்லா கலைகளுக்கும் தாய்!'

'ஒருமுறை பிரம்மதேவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரம்மன்
சரஸ்வதியான கலைவாணியை நாற்பத்தியெட்டு உருவாய் பூமியில்
அவதரிக்கச் சபித்தார்.  அவ்வாறு அவதரித்தவர்களே சங்கப் புலவர்கள்.
அந்தச் சங்கப் புலவர்களில் ஒருவரே நக்கீரர்.  அவரோடு கலைவாணிக்கு
என்ன பேசவேண்டும்?'  அவளுக்கு ஒரே யோசனை!

சாமரங்கள் வீச, மங்கல வாத்தியங்கள் முழங்க, புலவர் நக்கீரரை அழைத்து
வந்தார்கள்.  உள்ளே வந்த நக்கீரர், கலைவாணியின் திருமுகச் செழிப்பைக்
கண்டு தமது இரு கரங்களையும் தலைமீது குவித்து வணங்கினார்.  பிறகு,
கலைவாணிக்கு நேரே பூமியில் விழுந்து வணங்கினார்.

ஒரு வினாடி கலைவாணி உள்ளத்தில் சலனம்...  'பிரம்மதேவர் சபித்து
நான் நாற்பத்தியெட்டு உருவங்களானபோது அவற்றில் ஒன்றாய் ஆனவர்
நக்கீரன்.  அவர் என்னை வணங்குவது நானே என்னை வணங்குவது
போலாகுமா?..  இல்லை... இல்லை.., செடியில் மலர் பூத்தாலும்
செடி வேறு, மலர் வேறு; ஒரு தாயின் வயிற்றிலிருந்து குழந்தை
பிறந்தாலும், இருவரின் இரத்தம் ஒன்றானாலும் தாய் வேறு குழந்தை
வேறு என்பது தத்துவம்..'  தனக்குத்தானே தெளிவுபெற்ற கலைவாணி,
"வாருங்கள் தலைமைப் புலவரே" என வரவேற்றாள்.

"கலைதேவியே... தங்களின் அருட்கடாட்சம் என்னை மிளிர வைக்கிறது."

கலைவாணி ஒரு வினாடி யோசித்தாள்.  'சற்றுமுன் தன்னைச் சலனப்-
-படுத்தியதை நக்கீரனிடம் பகர்ந்தால் என்ன?'

"நக்கீரரே!  பிரம்மதேவரின் சாபத்தால் அடியேன் நாற்பத்தியெட்டு
உருவங்களானதும் அவர்களே சங்கப் புலவர்கள் என்பதும் உமக்குத்
தெரியும்.  அப்படியானால் உமது நிலை என்னஎனது நிலை என்ன?"

"கலைகளின் நாயகியே, இதற்கு விடை உங்களுக்குத் தெரியும்.
ஆனால், பதிலை என் மூலமாகப் பெறப்பார்க்கிறீர்கள்அடியேன்
நக்கீரன் - நாற்பத்தியெட்டு உருவங்களில் ஒன்றுதான்.  ஆனால்,
ஒன்று நாற்பத்தியெட்டாக முடியாது தேவி!"

கலைவாணியின் முகத்தில் மகிழ்ச்சி.  "தெளிவு பெற்றேன்; நக்கீரன்
வார்த்தைகள் மூலம் தெளிவு பெற்றேன்.  அதுசரி, நீர் இங்கு வந்ததன்
நேக்கம்?"

"பூலோகத்தில் இருந்து வந்தாலும் பூலோகத்தின் நினைவாகவே
இருக்கிறேன். தமிழுக்காக, அதன் தரத்திற்காக மூல முதல்வர்
முக்கண்ணனோடு வாதாடினேன். ஆனால், இன்று பூலோகத்தில் ஆயிரம்
தமிழ்ச் சங்கங்களை அமைத்து தமிழை பணத்திற்காக விற்பனை
செய்கிறான் மனிதன்.  தரமில்லாத தமிழை தன் உறவினர், தன் சாதியினர்
படைத்ததற்காகப் பாராட்டுகிறான்மேலும், இணையத்தளம் வழி
உலாவரும் ஏடுகளிலும் முகநூல்களிலும் யாரையாவது சாடுவதற்கு தமிழ்
மொழியின் பயன்பாடு கொச்சையாக்கப்பட்டு வருகிறது.  தமிழின் நிலை 
கவலையாக இருக்கிறது தேவி..!"

"
ப்படியா? பிறகு!..."

"
தாயே இந்தத் தமிழ்ச் சங்கங்கள், மற்றும் ஆய்வியல்துறைகள்
எல்லாம் பெயரளவில்தான் இருக்கின்றன.  தமிழ்மொழியை சிறுகச்
சிறுக இடைநிலைப்பள்ளிகளிலும், அதற்குமேலும் தமிழை ஒரு
பாடமாக எடுத்துப் படிக்கவிரும்பும் மாணவர்களின் ஆர்வத்திற்குக்
குழிதோண்டும் பள்ளி முதல்வர்களின் கெடுபிடிகளுக்கும் மற்ற
பிரச்சனைகளுக்கும் உடனே அறிக்கைகள் மட்டும்விடும் மன்னர்களாகத்தான்
அவர்கள் இருக்கின்றனர்; அல்லது கூட்டம்போட்டுத் தீர்மானம் நிறைவேற்றி
பூரித்துக்கொள்வார்கள்!"

"இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லையே நக்கீரரே!..."

"இருக்கிறது தாயே!.. 
அறிக்கைகளும் தீர்மானங்களும் போட்டால்
போதுமா?  களமிறங்கி அவற்றை முறியடித்துத் தமிழை ஒரு கட்டாயப்
பாடமாகக் கொண்டுவரவேண்டாமா? அவர்கள் இருப்பது மலாய் தேசத்தில்
தாயே!  கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஆயிரத்திற்கும்
மேலாக இருந்த தமிழ்ப்பள்ளிகள் இன்று பாதிக்குமேல் குறைந்துவிட்டது
தாயே!  இப்படியே போனால், இன்னும் இருபது முப்பது ஆண்டுகளில்
அவை நூறோ இருநூறோ யானறியேன் அம்மா!  அதற்கு ஒரே தீர்வு
மலாய் ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகளிலும் தமிழ்மொழி ஒரு
கட்டாயப்பாடமாகக் கொண்டுவரப்படவேண்டும் அல்லவா தாயே!  அப்படிக்
கொண்டுவந்தால்தானே பல்கலைக் கழகங்களிலும் தமிழ் இலக்கியம்
தொடரும்!...  அதன்பிறகு, எந்தப்பள்ளி முதல்வராவது, எந்தக்
கொம்பனாவது வாய் திறப்பானா தாயே?

அதனால்தான் சொன்னேன்,
அறிக்கை விடுபவர்களும் தீர்மானம்
போடுபவர்களும் நமக்கெதற்குதாயேதங்களைப்போன்ற ஒரு
அம்மாவும் என்னைப்போன்ற ஒரு திடம்மிக்க தைரியசாலியும்
இணைந்தால் இந்தக் கோரிக்கையை எப்படியாவது நிறைவேற்ற
இயலும் அல்லவா தாயே!"
 

"ஹஹ்..ஹஹ்..ஹா.. நல்ல நகைச்சுவை நக்கீரரே!..
கடைசியில் நாம் இருவரும் பூலோகம் செல்லவேண்டுமோ?"


அப்படியல்ல தாயே,  தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.
தமிழுணர்வுடன்கூடிய செயல்திறன்மிக்கவர்கள் சிலரும் அங்கு
இருக்கின்றனர்.  ஆனால், அவர்கள் செய்யும் கடமையையும்
தடுக்க அங்கு ஒருகூட்டம் இருக்கிறது தமிழுக்குத் தமிழனே
எதிரியாக இருப்பதுதான் பெரும் வருத்தமாக இருக்கிறது தாயே!"
என்று நீண்டதொரு பிரசங்கம் செய்து முடித்தார் நக்கீரர்.

"
பூலோக மனிதர்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்.
அவர்களுக்குள்ளேயே தேவர்
, அசுரன் எனப் பலரும் இருக்கின்றனர்.
ஆனால்
, அசுர குணமே அவ்வப்போது மேலோங்கும் நக்கீரா!"
"அசுர குணத்தை வைத்து தமிழோடு விளையாட வேண்டுமா தேவி?
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடவேறு பணம் கேட்கிறான் மனிதன்
!"
"அப்படியா? நம்பமுடியவில்லை நக்கீரரே! அவ்வளவு மோசமானவனாகி
விட்டானா மனிதன்
!" கலைவாணி கவலையுடன் வினவினாள்.
"நான் மிகைப்படுத்தவில்லை தேவி. உண்மையைச் சொல்கிறேன்,"
என்ற நக்கீரர் தன் கையோடு கொண்டுவந்த கையடக்கக் காணொளிப்
பதிவு மின் விசையைத் தட்டி ஓட விட்டார்
. கலைவாணியின் கண்களின்
முன்னே காட்சி விரிந்தது
...
              
***         ***         ***
ரு சிறிய மண்டபம்.  பிரதான மேடையில் சில நாற்காலிகள்
பிரமுகர்கள் அமர்வதற்காகக் காத்திருந்தன
.  மேடைச்சுவரில்,'தமிழ்க்கலை
முன்னேற்றக் கழகம்
' என்ற பெயருடன் ஒரு பதாகை தொங்கியது.
மண்டபத்தில் நூற்றுக்கும் சற்றுக் குறைவானோர் இருந்தார்கள்
.  ஐந்து
மணிக்குத் தொடங்கவேண்டிய இலக்கிய நிகழ்ச்சி ஆறு மணியாகியும்
தொடங்கவில்லை
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மணியம் கற்சிலைபோல்
நின்றுகொண்டிருந்தார்
!

நிகழ்ச்சி நெறியாளர் இராஜன் அங்கும் இங்கும் நடந்து தவித்தார்
.
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடுபவரைக் காணவில்லை
.  ஐந்து மணிக்கே
வருவதாகச் சொன்னார்
.  கைத்தொலைப்பேசியில் தொடர்புகொண்டபோது,
'
உடல்நலம்  குன்றியிருக்கிறேன், வர இயலாது' என்று சற்றும்
கவலையில்லாமல் சொல்லிவிட்டுப் பேச்சைத் துண்டித்திருக்கிறார்போலும்
,
மண்டைக்கு மணியடித்தாற்போல் காட்சி தந்தார்
'இதை இவன்
முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே
; நான் அழைத்துக் கேட்டபிறகுதான்
சொல்லணுமா
! பாவிப்பயல், கடைசி நேரத்திலே காலைவாரிட்டானே!
இவனுங்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட பொறுப்பு இல்லையே
' என்று
மனதிற்குள் புழுங்கினார்
.

மணியத்திடம் சென்று
, "அண்ணே, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடயிருந்த
ராகவன் வரல
, உடம்பு சரியில்லையாம், என்ன செய்யலாம்?" என்று
கேட்டார்
.
"இராஜன்.., நானே நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்பவரைக் காணோம்னு
தவிக்கிறேன்
. நீங்கவேறு, குண்டைத் தூக்கிப் போடுறீங்க! தமிழ்த்தாய்
வாழ்த்தை கூட்டத்தில் வந்திருப்பவர்களில் எவரையாவது கேட்டுப்பாடச்
சொல்லப்பா
" என்றவர் கூட்டத்தினரை ஒரு தரம் பார்த்துவிட்டு, "அட,
நம்ம பாடகர் மோகனைக் கேட்கலாமே
!" என்றார்.

இராஜன், உடனே பின்வரிசையில் அமர்ந்து யாருடனோ உரையாடிக்
கொண்டிருந்த பாடகர் மோகனை அழைத்து,
"தயவுசெய்து தமிழ்த்தாய்
வாழ்த்துப் பாடுறீங்களா
? இன்றைக்குப் பாடவேண்டியவர் வரல" என்றார்."இதுதான் வழக்கமா நடக்கிற விசயமாச்சே, தமிழ்த்தாய் வாழ்த்துபாட
யாரையாவது கடைசி நேரத்துலே அழைப்பீங்க
! முறையா யாரையும்
தயார் நிலையிலே வச்சிருக்க மாட்டீங்க
, அப்படியே வச்சிருந்தாலும்
அவங்களுக்கு கொடுக்கவேண்டியதைக் கொடுக்க மாட்டீங்க
..." என்று
எல்லாம் தெரிந்த நல்லையன்போல் வழவழத்தார் பாடகர் மோகன்
.

பிறகு இராஜனின் காதில் மெதுவாகச் சொன்னார்
, "தமிழ்த்தாய் வாழ்த்து
பாடலாமே
ஆனால் இலவசமாக முடியாது!  சன்மானம் தந்தால் பாடுறேன்"

இராஜன் அதிர்ச்சியடைந்தான்
!...  'தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட பணமா?"
              
***         ***         ***
க்கீரர் அந்த இடத்தில் கையடக்கக் காணொளியின் விசையை நிறுத்தினார்.
கலைவாணியைப் பார்த்தார்
.

இது குறித்து கலைவாணி வருந்தினாள்
! 'தன்னை வாழ்த்த மானிடன் பணம்
கேட்கிறானே
! தொல்காப்பியர் காலம்தொட்டு தொடர் சங்கக் காலத்திலும்
அதனையடுத்த பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை என்னைப் பாடுவதற்கென்று
யாரும் பாடல் புனைந்து நிகழ்ச்சி தொடங்குவதற்குமுன் பாடவில்லை
!
இடையில் மனிதனே ஒன்றை உருவாக்கி செயல்படுத்திப் பாடுகிறானே என்று
அகமகிழ்ந்தேன்
. சுப்பிரமணிய பாரதி உட்பட பலரும் பலவிதமாக என்னை
வாழ்த்திப் பாடினார்கள், இன்றும் மூலைக்கு மூலை அதிக ஆர்வத்தோடு
புதிது புதிதாகப் புனைந்து பாடக் கிளம்பிவிட்டார்கள்
. இருந்து போகட்டும்.
எல்லாம் எனக்காக ஆர்வத்தினால் எழுதிப் பாடுகிறார்கள் என்றால்,
இப்பொழுது அதைப் பாடுவதற்காக பணமும் கேட்க ஆரம்பித்துவிட்டானே
மானிடன்
!' என்று மனதிற்குள்ளேயே அசைபோட்டவாறு இருந்தாள் கலைவாணி.
"கலைதேவியே!... என்ன யோசிக்கிறீர்கள்?" என்று சொல்லி கலைவாணியின்
மௌனத்தைக் கலைத்தார் நக்கீரர்
.
"ம்ம்ம்... அதுசரி, பிறகு அந்த நிகழ்ச்சியில் தமிழ்வாழ்த்துப் பாடியது யார்
நக்கீரரே
?"

நக்கீரர் நடந்ததை கலைவாணியிடம் கதையாகச் சொல்ல ஆரம்பித்தார்
...
             
***         ***         ***
ராஜன் பாடகரிடம், "இது இலவச நிகழ்ச்சி, தமிழுக்காகச் செய்யப்படும்
நிகழ்ச்சி
, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மட்டுமல்ல, நிகழ்ச்சி நெறியாளனான
நானும்கூட பணம் வாங்குவதில்லை
.  இந்த இரண்டு காரியத்தையும்
அடிப்படைத் தமிழறிவு உள்ள யார் வேண்டுமானாலும் செய்யலாம்
.
ஏன்
! அரைகுறைத் தமிழில் பேசி தமிழ்க்கொலை செய்யும் பலரும்கூட
வேறுசிலவகையான நிகழ்ச்சிகளுக்கு நடத்துனராக இருப்பதைப்
பார்த்ததில்லையா நீங்கள்
!  அவர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் பணத்தை
அள்ளிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
.  வானொலி,
தொலைக்காட்சி ஊடகங்கள்வழி பிரபலமடைந்திருக்கின்ற ஒரே
காரணத்தால்தான் இந்த அவலங்கள் அரங்கேறுகின்றன
.  நான் உங்களை
குறை சொல்லவில்லை பாடகரே
, இது தமிழ்த்தாய் வாழ்த்து; நான்கு
வரிகளில் பாடினாலும் போதும்
" என்று விளக்கினார்.

பாடகர் மறுத்துவிட்டார்
.  'பணம் வைத்தால் பாட்டு' என்றார்.  கவலையோடு
அங்கிருந்து நகர்ந்த இராஜன்
, நடந்ததை ஏற்பாட்டாளர் மணியத்திடம்
சொல்ல
, அவரே பாடகர் மோகனிடம் சென்று சொல்லிப்பார்த்தார்.
அவர் மசியவில்லை
.  "தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல் விழாவைத்
தொடங்குவோம்
" என்றார் மணியம்.

இராஜன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை
.  "தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல்
இலக்கிய நிகழ்ச்சியா
, யாரையாவது வைத்துப்பாட வைப்பேன்" என்றவரிடம்,
"நீங்களே பாடலாமே..." என்றார் மணியம்.

இராஜன் எதுவும் சொல்லாமல் வந்திருந்தவர்களில் பாடுபவர்கள் யாராவது
இருக்கிறார்களா எனத் தேடிக்கொண்டிருந்தார்
.  சிலரிடம் கேட்டும் பார்த்தார்.
எவருமே இசையவில்லை
தாமே பாடுவது என முடிவுசெய்துவிட்டு
மணியத்திடம் சென்று சொல்லியதைப் பாடகர் மோகன் பார்த்துவிட்டார்
.

இராஜனிடம் வந்து
, "சரி, பரவாயில்லை நானே பாடுகிறேன்" என்றார்!
'என்ன பாடல்' என்று இராஜன் கேட்க, "இறை வாழ்த்து பாடுகிறேன்"
என்றார் மோகன்
.
"எனக்கு வேண்டியது தமிழ்த்தாய் வாழ்த்து" என்று சொன்ன இராஜனிடம்,
"அப்படியானால் பாடலை எழுதித் தாருங்கள், நான் பாடுகிறேன்" என்றார் மோகன்.
"அடடே... தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒன்றுகூட உங்கள் கைவசம் இல்லை;
இந்த இலட்சணத்தில் பணம் தந்தால்தான் பாடுவேன் என்ற கண்டிஷன் வேறு
!
நல்லா இருக்கு பாடகரே
! அப்படி ஒன்றும் தேவையில்லை;  முன்பே
கேட்ட மாத்திரத்தில்
, 'சரி பாடுகிறேன்' என்று சொல்லியிருந்தாலாவது
ஏதாவது நல்லதொரு பாடலை எழுதிக் கொடுத்திருப்பேன்
!  பரவாயில்லை,
நானே பாடுகிறேன்
" என்று சொல்லிவிட்டார் இராஜன்.

நேரமும் சென்றுகொண்டிருந்தது
. கூட்டத்திற்குத் தலைமை ஏற்பவரும்
வந்துவிட்டார்
.  பிறகு இராஜனே நிகழ்ச்சி நெறியாளராக செயல்பட்டு
தமிழ்த்தாய் வாழ்த்தையும் பாடி முடித்தார்
.  அவருடைய பாடலில் இசை
நயம் சற்றுத் தோய்ந்திருந்தாலும் செவி கேட்டின்புறும் அளவுக்கு நன்றாகவே
பாடி முடித்தார்
கூட்டம் சிறப்பாக முடிந்தது.
              
***         ***         ***
க்கீரர் நடந்த எல்லாவற்றையும் சொல்லிப் பேச்சை நிறுத்தியபோது
கலைவாணி தொடர்ந்தாள்
.
"இதில் என்ன பிரச்சனை நக்கீரரே? பணம் வாங்காமலேயே ஒருவர்
பாடிவிட்டாரே
!" என்றாள்.
"பிரச்சனை இருக்கிறது தேவி, சில வாரங்களுக்குப் பிறகு தமிழ்த்தாய்
வாழ்த்துப்பாட பணம் கேட்ட பாடகர்
, ஒரு எழுத்தாளரைப் பிடித்து,
அந்திப்பொழுதில் இருவரும் மது அருந்தி மதிமயங்கிய நேரத்தில்
, தாம்
பாடுவதற்குப் பணம் கேட்டதை மறைத்து
, "தமிழ்வாழ்த்துப்பாட
பாடகர் பஞ்ச
?" என்ற தலைப்பிட்டு எவருமே இல்லாதபோது பாடிய
இராஜனைக் கண்டித்து ஒரு பத்திரிகையில் கட்டுரை எழுதவைத்தாராம்
!
தமிழ்வாழ்த்துப் பாடிய இராஜனும்
, ஏற்பாட்டாளர் மணியமும் கட்டுரையைப்
படித்துப் பார்த்து நொந்துப்போய் இனி தமிழ் நிகழ்ச்சியே நடத்தக்கூடாது
என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம்
!   இப்படியே போனால் உண்மையில்
தமிழை நேசிப்பவர்கள் இருக்கமாட்டார்கள் தேவி
!" என்று தன் குமுறலை
வெளிப்படுத்தினார் நக்கீரர்
.
"தலைமைக் கவிஞரே!  தாங்கள் எதையும் மனதில் வைத்துக் கவலை
கொள்ளவேண்டாம்
.  நீங்கள் சொன்ன எல்லாப் பிரச்சனைக்கும் நானே
முடிவு கட்டுகிறேன்
, வாருங்கள் என்னுடன்!.." என்றுசொன்ன கலைவாணி
தன் உருவத்தை மாற்றிக்கொண்டு பூலோகத்திற்குப் புறப்பட்டாள்
.
                   ***     முற்றும்         ***  

சிறுகதை : 'தேங்காமட்டை கெழவன்'

கடந்த 23.9.2012 மற்றும் 30.9.2012 தினக்குரல் நாளிதழில் பிரசுரமான
இரு வாரக்கதை.

(இது 60-களில் நமது தோட்டப்புறங்களில் நடந்த கதை!
ஆறாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன், தனது
இயல்பான பேசும் மொழியில் கதையை நகர்த்துகிறான். - கதாசிரியர்)

சிறுகதை :
'தேங்காமட்டை கெழவன்' 
  படைப்பு   :   பாலகோபாலன் நம்பியார், கிள்ளான்

தேங்காமட்டை கெழவனுக்கு எங்கமேல எப்பவுமே ஒரு கண்ணுநாங்க
எங்க போனாலும், எது செஞ்சாலும் நேரம்  பாத்து வீட்டுக்குப்போயி பத்த
வச்சிடுவாருதனாலே நானும், என் கூட்டாளி நெய் ஃப்பாதரும்,
தெமர்லோவும் அந்தக் கெழவன் வெளியே இல்லாத நேரம் பாத்து எங்க
'
எஸ்ட்டேட்'டு லயத்தையே ஒரு சுத்து சுத்தி கலக்கிட்டு வந்துடுவோம்.

'
ஸ்ட்டேட்'டு  லயத்து மேட்டுலே ஆயாக்கொட்டாய் இருக்கு, பக்கத்துலே
ஒட்டியே ஒரு பொது 'கக்கூசு' இருக்குவசரத்துக்கு உள்ளே போறவங்க
கதவமூடி கையிலே புடிச்சிட்டுதான் உக்காரணும்.  தாப்பாள் கெடையாது
அதெ ஒடச்சது எங்களாலான சின்ன கைங்கரியம்.  சுமாரா எட்டு  அடி
ஒயரத்தில இருக்குற அந்தக் 'கக்கூஸ்' மேல, ஆயாக்கொட்டாயோட பாதி
பலகை சுவருக்கு மேல ஓட்ட ஓட்டையா இருக்குற கம்பியிலே கால வச்சி
ஏறி, அங்கேயிருந்து புல்லுமேல தொபக்கடீனு குதிக்கிறதுல இருக்குற
சொகமே சொகம்
 

ப்படித்தான் ஒருநாளு மத்தியானத்துக்குமேல நாங்க மூனுபேரும் மேல
இருந்து குதிச்சிக்கிட்டிருந்தப்போ, எங்கேயோ போய்ட்டு வந்துக்கிட்டு இருந்த
தேங்காமட்டை கெழவன் திடீர்னு 'கக்கூசு'க்குள்ள பூந்துட்டாருரொம்ப
நேரமா வெளியே வர்றதுக்கா காத்துக்கிட்டிருந்தோம், கெழவன் லேசுல வரல!

"
டேய்... என்னாடா இந்தத் தேங்காமட்டைக்கு இவ்ளோ நேரம் புடிக்குது
த்தன நாளா அடக்கி வச்சிருந்தானோ!"னு தெமர்லோ சொன்னான்.

"
ரு 'ஐடியா'டா... கதவ புடிச்சி இழுத்துட்டு ஓடிப்போய் 'கக்கூசு' பின்னாலே
ஒளிஞ்சிக்குவோம்"னு நெய் ஃப்பாதர் சொன்னான்.
 

முந்திரிக் கொட்டையாட்டம் நான் முன்னே போவ, கூட்டாளிங்க ரெண்டு
பேரும் பின்னால வந்து, கமுக்கமா 'ஒன்னு, ரெண்டு, மூனு'னு சொல்லிக்
கதவ இழுத்தப்ப 'அல்லூரு' தடுக்கி பின்பக்கமா 'லபக்'குனு விழுந்திட்டோம்
தே வேகத்துல எழுந்திரிச்சி ஓடத்தான் நெனச்சோம்; ஒருத்தன் கால்லே
ரத்தம், ஒருத்தன் கால்லே சுளுக்கு, எனக்கு இடுப்புல வலிதேங்காமட்டை 
கெழவன் அரையும் கொறையுமா எழுந்திரிச்சி வந்து வாய்க்கு வந்ததெல்லாம்
சொல்லித் திட்டிப்புட்டு நாலு சாத்து சாத்துனாரு!
 

யாக் கொட்டாய்ல இருந்த முத்தம்மா ஆயாவும், ஆவுடையம்மா ஆயாவும்
பாத்துப்புட்டாங்கங்களுக்கு ஒரே வெக்கமா போச்சி!  துக்கப்புறம் 'கக்கூசு'
மேல இருந்து எங்க... எகிறிக் குதிக்கிறதுவீட்டுக்கு போனப்ப, அங்கே என்மேல
எகிறிக் குதிச்சிட்டாரு அப்பா'ஒழுங்கு மரியாதியா ஸ்கூலு முடிஞ்சதா, வீட்டுக்கு
வந்தோமா, வயித்துக்கு முழுங்கிட்டு படுத்துக் கொஞ்சம் தூங்கனோமானு
இல்லாமே, தெனசரி ஊரு சுத்துறதே பொழப்பா போச்சு இவனுக்கு; எல்லாம் நீ
குடுக்குற செல்லம்டீ'னு அம்மாவ திட்டோ திட்டுனு திட்டிப்புட்டாரு அப்பா. 
 

பாவம் அம்மா... எனக்கு அழுவாச்சியா வந்துடுச்சி. ல்ல வேல எனக்கு அடி
விழல ல்லாம் அந்த தேங்காமட்டையோட வேலதான்.  எங்க மூனு பேரு
வீட்டுலேயும்  போட்டுக் கொடுத்திட்டாருனு மக்கியாநாளு ஸ்கூலுக்கு போனப்ப
கூட்டாளிங்க சொன்னானுங்க.  ஹி.. ஹி.. ஹி.. அவுங்க வீட்டுல அவனுங்களுக்கு
செம அடியாம்!
 

நாங்க 'ஸ்கூலு'க்குப் போனப்ப, எங்க ஆறாம்பு வாத்தியாரு எங்கள ஒரு
மாதிரியா மொறச்சி பாத்தாருங்களுக்கு பக்கு பக்குனு இருந்துச்சி
'ஒருவேல அந்தத் தேங்காமட்டை கெழவன் இங்கேயும் கோள்
சொல்லிட்டாரோ'னு பயந்து போய்ட்டு இருந்தோம்.

"
ணியம், வேலு, ராமசாமி மூனுபேரும் மேஜை மேலே ஏறுங்க!"னு
செபஸ்தியன் வாத்தியாரு அதட்டலா சொன்னாரு.  ன்னுக்கு வராத
கொறதான், பயந்து கிட்டே ஏறி நின்னோம்
கிட்ட வந்து, "நன்னெறிகள் பற்றி 
பள்ளிக்கூடத்திலே படிச்சி கொடுக்கிறோமா இல்லையா?  வேலு.., நீ சொல்லு!"

"
......ஆமாம் ஐயா..."னு சொன்னதுதான் மிச்சம், பிரம்பால சாத்து
சாத்துனு சாத்திப்புட்டாரு!  'ஐய்யய்யய்யா...வலிக்குதுயா...'னு வேலு
சத்தம்போட்டு அழுதாலும் வாத்தியாரு விடல!
தப்பாத்த தெமர்லோவுக்கு 
மேஜை மேலேயே ஒன்னுக்கு போயிடுச்சி! 
 


துக்கும் சேத்து வாத்தியாருகிட்டே வாங்கிக் கட்டிக்கிட்டான் னக்கும்
நல்லா கெடச்சது.  வாளில தண்ணிய கொண்டுவர வச்சி, எங்க மூனு
பேத்தையும் மேஜைய தொடைக்க வச்சி, சிமெண்டு தரைய கழுவவச்சி,
நாறியே போச்சி!  வகுப்புல இருந்த எங்க கூட்டாளிங்க ஜெயமதியும்,
கமலவேணியும், குண்டம்மாவும், நேசமணியும் எங்களப்பாத்து சிரிச்சதுங்க.
ங்களுக்கு வெக்கம் வெக்கமா போச்சிடுவாப்பய தெமர்லோ மேல
எனக்கும் நெய் ஃப்பாதருக்கும் ஒரே கோவம் புட்டுக்கிட்டு வந்திச்சி 'ஸ்கூல்'
முடியட்டும், அப்புறமா அவனப் பாத்துக்குவோம்'னு சொல்லிக்கிட்டோம்.
 

ன்னிலேருந்து தேங்காமட்டைக்கும் எங்களுக்கும் பெரிய லடாய்தான்
ந்தக் கெழவனும் எங்களப்பத்தி பத்தவச்சிக்கிட்டே இருந்தாரு ருக்கட்டும்,
'ஸ்கூல் லீவு' வரட்டும் வச்சிக்குவோம்னு இருந்தோம்.
 


சொல்லப்போனா எங்க ஆறாம்பு செபஸ்தியன் வாத்தியாரு ரொம்ப நல்லவரு.
ல்லா படிச்சி கொடுப்பாருப்பவுமே ஒன்ன பத்தி சொல்லிக்கிட்டே இருப்பாரு.

"மாணவர்களே... இந்த ஆண்டுதான் கடைசி ஆண்டு அரசாங்கப் பரீட்சை;
அடுத்த ஆண்டுல இருந்து ஆறாம் வகுப்புக்குக் கட்டாயப் பரீட்சை கிடையாது.
ழுங்கு மரியாதையா நான் போதிக்கிறத நல்லா புரிஞ்சிக்கணும்; புரியலேனா
கேட்டுத் தெரிஞ்சிக்கணும்.  நான் உங்களுக்காக நிறையப் பயிற்சியும் தந்து
வர்றேன்.  ரீட்சையிலே தேர்ச்சி அடைந்தால்தான் அடுத்த ஆண்டு 'ரிமூவ்
வகுப்பு'க்குப்  போகமுடியும்.  இல்லேனா, இந்தத் தோட்டத்திலேயே கிடந்து
பால்மரம் சீவறதுக்கும், வெளிக்காட்டு வேலை செய்யறதுக்கும்தான்
போகணும்.  இதுக்குத்தானா உங்க அப்பா அம்மா படிக்க வைக்கிறாங்க?ன்ன, 

நான் சொன்னது புரிஞ்சதா?"னு அடிக்கடி சொல்லிச் சொல்லி எனக்கும்
அது மனப்பாடம் ஆயிடுச்சி.  அதோட, "படிச்சா மட்டும் போதாது, ஒழுங்கு
மரியாதையா நடக்கவும் தெரியணும்"னும்னு வேற சொல்லுவாரு!   



வீட்டுக்குப் போனப்ப வாத்தியாரு அடிச்சத அப்பாகிட்ட சொல்லல!   சொல்லி 
இருந்தா வாத்தியாரு அடிச்சதவிட இன்னும் ரெண்டு சாத்து சாத்தியிருப்பாரு! 
வேலுதான் - நெய் ஃப்பாதரோட உண்மையான பேருவன் காதுல 'சீழ்'
வடியிறதால சின்ன வயசிலேயே அந்தப் பேர் வச்சி எல்லாரும் கூப்பிட்டு
கூப்பிட்டு அதுவே ஒட்டிக்கிச்சி.
 


நாலாம்பு படிக்கிறப்போ ஒருநாளு, பூகோள வாத்தியாரு, மலாயா வரைபடத்த
காமிச்சி,  'பகாங் மாகாணத்தில 'தெமர்லோ' பட்டணம் எங்க இருக்கு'னு
கேட்டாருல்லாரும் தேடுனோம்;  ராமசாமிதான் மொதல்ல கண்டு புடிச்சான்! 

தனால, அன்னிலேருந்து அவன 'தெமர்லோ'னு கூப்பிட ஆரம்பிச்சோம்.  


னக்கும் ஒரு பேரு இருக்குநடு கழுத்துக்கிட்ட பத்துக்காசு வட்டத்துல
கறுப்புப்பொட்டு மாதிரி மச்சம் இருக்கு, அது நான் பொறக்கும்போதே
இருந்துச்சாம்.  தனாலே என்ன எல்லாரும் 'பொட்டு'னுதான் கூப்பிடுவாங்க. 

'ஸ்கூல்'ல மட்டும்தான் அப்பா அம்மா வச்ச பேரச் சொல்லி வாத்தியாரு
கூப்பிடுவாரு.
 


டையில, ரெண்டாவது தவண பரீச்சைலயும் நான்தான் ஒன்னாவதா
வந்தேன்.  தெமர்லோ நாளாவதாவும், நெய் ஃப்பாதர் ஆறாவதாவும்
வந்தானுங்க'ஞ்ச ரிப்போர்ட் கார்ட' அப்பாகிட்ட காட்டி 'சைன்' வாங்கினேன்.
ட்டிகொடுத்துட்டு, 'இதுல எல்லாம் நல்லாதான் வர்றே..!  ஆனா, ஊர் சுத்துறத
மட்டும் விடமாட்டுற'னு மொறச்சாரு
 


ப்புறமா  'ஸ்கூல் லீவு'ம் வந்துச்சி.  தெனமும் 'கவுண்டா கவுண்டி',
'ரவுண்ட் ரேஸ்',  'போலீஸ் அண்ட் தீஃப்',  'பாரி' விளையாட்டுனு இன்னும்
என்னென்னமோ விளையாடுவோம். கொய்யா மரத்துல ஏறி பழம்
பறிக்கிறது, அதில கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுறது, 'கக்கூஸ்' மேல ஏறி
குதிக்கிறது;...ய்...யோ... ஒரே கொண்டாட்டந்தான்...

'கவுண்டா கவுண்டி' விளையாடுறப்ப ஒருநாளு தேங்காமட்டை கெழவன்,
வெட்டுன தேங்காமட்டைங்கள கட்டி தூக்கிக்கிட்டு அந்தப்பக்கமா குறுக்க
போனாரு.  அப்ப நான்தான் விளையாடுனேன்.  நெய் ஃப்பாதர் கண்ணடிச்சான்.
தேங்காமட்டையப் பாத்து குறிவச்சேன்.  குச்சி அவரு காதுஓர மண்டையில
'டபார்'னு பட்டுச்சி.  'யோ'னு கத்திட்டு, "டேய்ங்..."குனு அவருகிட்ட இருந்து
சத்தம் வர்ற சமயம் பாத்து அங்கிருந்து பறந்துட்டோம்!
 
காலையில பசியாறிட்டுப்போனா மத்தியானம் கொட்டிக்க வந்துட்டு அப்புறம் 
அப்பாவுக்கு 'ஓவர் டைம்' வேலனு தெரிஞ்சா சுத்துறதுக்கு கெளம்பிடுவேன்.
வேல முடிஞ்சி சாயங்காலம் வீட்டுக்கு வர்றதுக்குள்ள வந்திடுவேன்.
 

செம்மண் ரோட்டுல கூட்டாளிங்களோட சைக்கிள 'பிஞ்சாம்' பண்ணிக்கிட்டு
நானும் நெய் ஃப்பாதரும் 'கவட்டை'ல கால உட்டுட்டு ஓட்டுறப்போ தெமர்லோ
மட்டும் அவன் அப்பாவோட சைக்கிள்ல 'சீட்'டு மேல உக்காந்துகிட்டு ஓட்டுவான்.
ந்த வயசிலேயே அவன், கிராணிமாருங்க வீட்டுக்குப்போற ரோட்டு ஓரத்துல,
வரிசையா நிக்குற 'தியாங் லாம்பு'  மாதிரி ஒல்லியா, ஒயரமா இருப்பான்
ப்பவாச்சும் 
இந்த ஜெயமதி, கமலவேணி, நேசமணி அல்லது குண்டம்மாவாச்சும் 
அந்த நேரம் பாத்து ரோட்டுல வந்தா தெமர்லோ மட்டும் அப்படியே 'சீட்'ல உக்காந்து 
ஓட்டுற 'ஸ்டைல்'ல நெஞ்சத் தூக்கிக் காட்டிக்கிட்டு 'சொய்ங்ங்...'னு பறப்பான் 


 'அந்த ஒத்தநாடி 'தியாங் லாம்பு'  பயலுக்கு நெஞ்சு இருந்தாத்தானே காடுறதுக்கு'னு 
எங்களுக்கு நெனப்பு இருந்தாலும் 'கவட்டை'ல கால வச்சி ஓட்டுற  எங்க ரெண்டு 
பேத்தையும் பாத்து அதுங்க கிண்டல் பண்றது... ஐயோ.., மானமே போயிடும்! 


ங்களுக்கு வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து 'தேங்காமட்டை'னுதான் அந்தக்
கெழவன் பேரு தெரியும்தென்ன மரத்துல ஏறி தேங்கா பறிப்பாரு, மட்டை'ங்கள
வெட்டிப்போடுவாரு. தேங்காயோட மேல இருக்குற நாரை எல்லாம் உரிச்சி
தேங்காய்கள சாக்குல போட்டு, வீடு வீடா கொண்டுபோய் விப்பாரு.  நாரை
என்னமோ செஞ்சி கயிறு செய்வாரு.  மட்டை'ங்கள சீவி கூட்டுமாறு செஞ்சி
போய் விப்பாரு.  யாரும் அவர ஒன்னும் கேக்கமாட்டாங்க.  'எஸ்டேட்'டுல
நடக்குற கல்யாணத்துக்கும், சாவுக்கும் மட்டை பின்னி கட்டுறதும் தேங்கா
மட்டைதான்.  ப்படி தென்ன மரத்த நம்பியே இருந்துட்டாருல்லா நீச்சல்
அடிப்பாருவருக்கு வயசான பொண்டாட்டிதான் இருக்கு.  வேற யாரும்
அவுங்க வீட்டுல இல்ல!
 


தே மாதிரி 'எஸ்ட்டேட்'டுல ஒரு சாவு'னா மொதல்ல 'பேக்கை' கெழவன்
கிட்டதான் சொல்லணும்ந்த ஆளுதான் லயம் பூரா போய் தண்டோரா
போட்டுட்டு வருவாரு.  சாவு வீட்டுல காசு  குடுப்பாங்கபொகையில போட்டு
போட்டு ஒரு பக்க கன்னத்துல எப்பவோ ஏதோ வந்துடுச்சாம்; அதனால அந்தப்
பக்கம் குழியா ஆழமா இருக்கும்பாக்குற எடத்துல எல்லாம், "ஏய்... பேக்க..."னு
சத்தம் போட்டு கூப்புட்டு ஓடிடுவோம்.  பாவம் 'பேக்க' கெழவன், அந்தத்
தேங்காமட்டை மாதிரி எங்கள தொரத்த மாட்டாரு!
 


வாரத்துக்கு ஒரு தடவ ஞாயித்துக்கெழம தெர கட்டி படம் காட்டுவாங்க.
'ஸ்கூலு லீவு' அன்னிக்கும் அப்படித்தான் ஒருநாளு நாங்க முனுபேரும் எப்பவும்
போல மத்த கூட்டாளிங்களோட சேந்து 'சோ பிரதர்ஸ்' வேன் வர்றதுக்கா
காத்துக்கிட்டு இருந்தோம்.  வேன பாத்ததும், 'படோம்... படோம்...'னு கத்திக்கிட்டு
ஓடுனோம்.  ப்ப ரோட்டு ஓரமா தேங்காமட்டை போய்க்கிட்டிருந்தாரு; அந்தக்
கெழவனப் பாத்த பயத்துல கீழ குழி இருக்கிறத பக்காம விழுந்து பொரண்டு
அந்த ஆளு காலுக்கு அடியில போய் விழுந்தேன்.  கை முட்டியில லேசா ரத்தம்
வந்துச்சிசெம்மண்ணுல பொரண்டதால சட்டை எல்லாம் 'சொக்லேட்டு'
கலரா போச்சி.  
 


கெழவன், "வேணும்டா ஒனக்கு"னு சிரிச்சிக்கிட்டே சொன்னது மானமே
கப்பலேறிப்போன மாதிரி ஆச்சு ப்புறம் கூட்டாளிங்கதான் தூக்கிவிட்டானுங்க
முக்கமா வீட்டுக்குப்போயி குசினி பின்னால கை கால அலம்பிட்டு, சட்டைய
கழட்டி வாளியில போடுறப்ப அம்மா பாத்துட்டாங்க முதுகுல ரெண்டு தட்டு
தட்டிட்டு, "இதுக்குத்தாண்டா ஒன்னபத்தி உங்க அப்பா என்ன சொல்லி ஏசுனாலும்
என்னால எதுத்து பேச முடியல; ஒன் அண்ணே இப்படியா இருக்கான்?"னு நேரம்
தெரியாம உபதேசம் செஞ்சாங்க.

"ஐயோ, அம்மா! ப்பாகிட்ட சொல்லிடாத"னு சட்டைய மாத்திட்டு
இருந்தப்ப கை முட்டி சிராய்ப்புக் காயத்தில இருந்து ரத்தம் வர்றத அம்மா
பாத்து அதுக்குவேற சத்தம் போட்டாங்க ஞ்சுல ஊதா கலர்  மருந்தத்தொட்டு
பூசிவிட்டாங்க.  பிராஞ்சா'வத் தூக்கிட்டு படம் காட்டுற எடத்துக்குப் போனேன்.
 


தென்ன மரத்துக்கு அடியில எப்பவும் உக்கார்ற எடத்துல வச்சிட்டு 'பிராஞ்சா'ஆடாம 
இருக்க காலுக்கு அடியில கல்லு வச்சி சரிபண்ணிட்டு அங்கேயே இருப்பேன் 
ன்னிக்கும் 'வங்காளி பாய்'தான் படம் ஓட்ட வந்தான்.  பாய் நல்லா தமிழ்
பேசுவான்.  "ன்னிக்கு என்ன படம் பாய்"னு கேட்டுக்கிட்டு இருந்தப்ப
தெமர்லோவும், நெய் ஃப்பாதரும் கையில 'பாய' சுருட்டிக்கிட்டு வந்துட்டானுங்க.

"
ன்னிக்கி பாய் 'அதிசயப் பெண்' கலர் படம் காட்டுறான்"னான்.

"
டேய், இந்தப் படத்துலதான் 'ஈனா மீனா டீக்கா... ஜாய் ஜாமானிகா... நக்கான்
பூச்சி மக்கான்' பாட்டு இருக்குடா"னு சொல்லி பாடிக்கிட்டு அங்க வந்த மத்தக்
கூட்டாளிங்களோட சேந்து ஆட்டம் போட்டோம்.  துக்குள்ள இருட்டிடுச்சு.
 


'கச்சான்பூத்தே' பாட்டியும் கடை போட வந்துட்டாங்க.  பாயி படம் ஓட்டுற
'
மிசின ஸ்டாட்' பண்ணிட்டு 'தெரை'ல வெளிச்சம் போட்டு சரியா இருக்கானு
பாத்துக்கிட்டிருந்தான்.  பாட்டிக்கிட்ட  ஆளுக்கு அஞ்சு காசுக்கு கச்சான் வாங்கித்
திண்ணுக்கிட்டே, "டேய்... இன்னிக்கி தேங்கமட்டை கெழவன் வந்து கச்சான்பூத்தே
பாட்டிக்கிட்ட கச்சான் வாங்றப்ப இருட்டோட இருட்டா கால வாரிடுவோம்.
பாட்டிமேல தொபக்கடீனு விழுந்தா பாட்டி அந்தக்கெழவனப் போட்டு சாத்துவாங்க,
அப்பத்தான் நமக்கும் சந்தோசமா இருக்கும்டா"னு ஐடியா போட்டோம்.
 


வீட்டுல இருந்து அப்பா, அம்மா, அண்ணன், அக்கா எல்லாம் படம் பாக்க
வந்துட்டாங்க.  நானும் போய் 'பிராஞ்சா'ல உக்காந்தேன்.  தேங்காமட்டை கெழவன்
கச்சான் வாங்கப்போறத பாத்துட்டேன்.  ப்ப 'தெரைல சேம்பல்' படம் ஓடிக்கிட்டு
இருந்துச்சி 'னைசா' கெளம்பிப் போயி கூட்டாளிங்களையும் கூட்டிக்கிட்டுப்
போனேன்.  சொன்னமாதிரியே கெழவன பாட்டிமேல கவுத்துட்டு ஓடியே ஓடிட்டோம்.
ல்லவேள யாரும் எங்கள கவனிக்கல.  அப்புறமா மெதுவா அந்தப்பக்கம் போனோம்.
ல்ல நல்ல பழமொழியா பாட்டி வாயில இருந்து கொட்டிக்கிட்டு இருந்துச்சி.  பாவம்,
கச்சான் எல்லாம் கொட்டிப் போச்சு.  அதப்பத்தி நாங்க நெனச்சி பாக்கல பாட்டிக்கு
உதவுறமாதிரி எல்லாத்தையும் எடுத்துவச்சிட்டு படம்பாக்கப்போய் அவுங்க அவுங்க
எடத்துல உக்காந்தோம்

"அங்க என்னடா சத்தமா இருந்துச்சி?" அப்பா கேட்டாரு.

"ஒன்னும் இல்லப்பா, கச்சான்பூத்தே பாட்டியோட கச்சான் எல்லாம் கொட்டிடுச்சாம்;
தேங்காமட்டை கெழவன்தான் தள்ளிவிட்டுட்டாராம்."

"அந்த ஆளு தள்ளிவிட்டாரா, இல்லே நீ போய் தள்ளிவிட்டியா?"

"சும்மா இருந்து படம் பாருங்க, எதுக்கு எடுத்தாலும் அவன்மேல எரிஞ்சி
விழுறீங்க"னு அம்மா எனக்கு 'சப்போட்' பண்ணுனாங்கப்பா 'கப்சிப்'ஆயிட்டாரு.   


டத்துல அந்தப்பாட்டு வந்தப்ப ஒரே குஷிதான்னா அந்தப்
பாட்டுல 'ஈனா மீனா டீக்கா... ... ஜை ஜாமானிக்கா...... மாக்கா நாக்கா
நாக்கா'னு வந்துச்சி.  நாங்க இவ்ளோ நாளு 'நாக்கான் பூச்சி மக்கான்'னு
பாடிக்கிட்டு இருந்தோம்.  லீவு முடிஞ்சி  நாளைக்கி 'ஸ்கூலுதொறப்பாங்க.
பொம்பள புள்ளைங்க எல்லாம் எங்கள நல்லா கேலி பண்ணுங்களேனு இப்பவே
வவுத்த கலக்குனது.
 


க்கியாநாளு காலைல 'ஸ்கூலு'க்குப் போறப்ப தேங்காமட்டை கெழவன்
நெத்தியில 'ப்ளாஸ்டர்' ஒட்டிக்கிட்டு எங்க 'ஸ்கூல்' பக்கமா வந்தாரு!
ங்களுக்குப் பகீர்னு போச்சி!  நேத்து ராத்திரி கச்சான் பூத்தே பாட்டிமேல
தள்ளிவுட்டது தெரிஞ்சி போச்சோனு அப்படியே 'ஜேம்' ஆயிட்டோம்!  'ஸ்கூல்'
தொறந்த மொதல்நாளே வாத்தியாருகிட்ட நம்பளப் பத்தி வச்சாருடா ஆப்பு'னு
நெனச்சி வந்துக்கிட்டிருந்தப்ப, தெமர்லோவும், நெய் ஃப்பாதரும் என் பின்னால
ஓடிவந்தனுங்க!
 


மூச்சு வாங்கிட்டே தெமர்லோதான் பேச ஆரம்பிச்சான்.  "டேய் பொட்டு,தேங்காமட்டை 'ஸ்கூலு'க்குப் போயி நம்பளப்பத்தி பத்தவைக்கப்  போறான்டா,பயமா இருக்குடா!"

"ஆமான்டா, பாட்டிமேல தள்ளிவுட்டது நாமதான்னு நம்பள மாட்டிவுட்டா
வர்ற ஞாயித்துக்கெழம படம் பாக்கிறப்ப அவன சும்மா விடக்கூடாதுடா"
நெய் ப்ஃபாதருக்கு கோவம் கொப்பளிச்சிருச்சி!
 


தேங்காமட்டை கெழவனுக்கு நான் மட்டும்தான், 'அவரு, இவரு'னு கொஞ்சம்
மரியாத கொடுப்பேன்த்தவனுங்கெல்லாம் கொடுக்க மாட்டானுங்க.
 


நெய் ஃப்பாதர் தலையில ஒரு தட்டு தட்டிட்டு, "டேய்... சும்மா இருக்கியா, நீயே
போய் ஆமாம் சார் நாங்கதான் செஞ்சோம்னு ஒளறிடுவ போல இருக்கே..!
பே
சாம வாய பொத்திக்கிட்டு இரு.  டேய் தெமர்லோ, அப்படி தேங்காமட்டை
கெழவன் நம்பளப்பத்தி ஏதாச்சும் சொல்லி சாரு 'மேஜ'மேல ஏறி நிக்கச்சொல்லி
அடிச்சிக் கேட்டாலும் 'இல்ல'னுதான் சொல்லணும்.  யந்துட்டு அன்னிக்கு மாதிரி
மேஜைல ஒன்னுக்கு அடிச்சே நாங்க ரெண்டு பேரும் சேந்து கீழ தள்ளி
மிதிச்சிடுவோம்டா!  அன்னிக்கே உன்ன நங்க ஒதச்சிருக்கணும்'தியாங் லாம்பு'
ஒயரத்துக்கு இருக்குற உன்னோட தலையில தட்டுறதுக்கு எங்க கை எட்டல."

ழகேசன் போய் மணி அடிச்சான்ல்ல 'சைசா' இருப்பான்.  அவன் தான்
எப்போதும் மணி அடிப்பான்பாடம் நடந்துக்கிட்டு இருந்துச்சி.  ப்பப்ப
தேங்காமட்டை கெழவன எங்க மூனு பேரோட கண்ணும் தேடிக்கிட்டு இருந்துச்சி.
"அ
ங்க என்னடா பராக்கு பாக்கிறீஙக?"  வாத்தியாரு சத்தம் போட்டாரு!

"ஒன்னும் இல்ல சார்... உடும்பு ஓடுனது சார்!"  நெய் ஃப்பாதர் ஏதோ சொல்லி
சமாளிச்சான்.
 
வாத்தியாரு எட்டிப்பாத்து, "எங்கடா காணோம்"னு கேட்டதும் தெமர்லோ ரெண்டு
கையையும் அவன் நெஞ்சுமேல வச்சி தலைய குனிஞ்சிட்டான்.

"அது... அது... வேகமா ஓடிப்போச்சு சார், அந்த 'லாலாங்' காட்டு உள்ளுக்கு
போயிடுச்சி சார்!"  நெய் ஃப்பாதர் மூள வேகமா வேல செஞ்சது.
 
ப்புறமா எல்லாரும் போய் 'ரிப்போட் கார்ட' வாத்தியாரு கேட்டப்ப கொடுத்தோம்.
என் 'ரிப்போட் கார்ட' கொடுத்தப்ப, "இந்தக் கடைசி தவணையில அரசாங்கப்
பரீட்சை வருதுனு தெரியும்ல, இந்தத் தடவையும் சிறந்த மாணவனா வருவியாடா
மணியம்?"  ன் தோல தட்டிக்கொடுத்துக்கிட்டே கேட்டாரு.

"வருவேன் ஐயா"னு ரொம்ப பெருமையா சொன்னேன்.
 


ப்புறம் எல்லாத்தையும் பாத்து, "இங்க பாருங்க மாணவர்களே... மணியம்
கொஞ்சம் சுட்டியாக இருந்தாலும் படிப்புல கெட்டி; அவன்தான் வருகிற
அரசாங்கப் பரீட்சையிலேயும் சிறப்பா எழுதி தேர்ச்சி பெறுவேன்னு சொல்லி
இருக்கான்.  நீங்கள் எல்லோரும் அவனுக்குப் போட்டி கொடுத்துப் படிச்சி நம்ம
பள்ளிக்கூடத்துக்குப் பெருமை சேர்க்கணும்"னு சொல்லிட்டு, "செய்வீங்களா!?"னு
கொஞ்சம் அதட்டலா சத்தம்போட்டுக் கேட்டாரு!

"செய்வோம் ஐயா!"னு எல்லாரும் சொன்னாங்க.   


த்துமணிபோல இடைவேள வந்த நேரம்பாத்து தேங்காமட்டை கெழவன் எங்க 
இருக்கார்னு தேடிக்கிட்டுப் போனோம்.  ஸ்கூலுக்கு வெளியே இருக்குற கொல்லப் பக்கம்  நலாம்பு, அஞ்சாம்பு, ஆறாம்பு வாத்தியாருங்க வாரத்துக்கு ஒரு தடவ அவுங்கவுங்க புறப்பாடு நடவடிக்கை நேரத்துல எல்லாருக்கும் சின்ன சின்ன மண்வெட்டி, சுலோப்பு எல்லாம் கொடுத்து
அந்தப்பெரிய நெலத்தக் கொத்தச் சொல்லுவாங்கப்புறம் உறம் போட்டு
கொடிக்கம்பம் ஏத்தி சரிசெய்யறதுக்கு வாத்தியாருங்களும் உதவி செய்வாங்க.
 

துல ஒருதடவ அவரக்கா, ஒரு தடவ பொடலங்கா, அப்புறம் பயித்தங்கா'னு
பயிரு செய்வோம். க்கத்துல பரங்கிக்கா, பச்சமொளகா, தக்காளி எல்லாம்
வெளையும், அதுக்கும் பக்கத்துல மரவள்ளிக்கெழங்கு குச்சி நட்டு வளப்போம்.
சுத்தி வேலி போட்டு இருக்கும்'எஸ்ட்டேட்'ல பொதுவா எல்லாரோட
வீட்டுலயும் சின்ன சின்னதா கொல்லையில மரவள்ளிக்கெழங்கு, அது
இதுன்னு ஏதாச்சும் போட்டுருப்பாங்க தனால 'ஸ்கூல்'ல கொல்லையில
வெளஞ்சிருக்கிறத தொடமாட்டாங்க.
 


ப்போதும் அல்லாப்பிச்சை மாமாதான் வருசத்துக்கு மூனு நாலு தடவ வந்து
நெலத்துல வெளைஞ்சத எல்லாம் பறிச்சி 'பேப்பர்' மேல கொட்டி வச்சிடுவாரு. 

தே மாதிரி  மரவள்ளிக்கெழங்க எல்லாம் புடுங்கி ஒரு எடத்துல குவிச்சி
வச்சிடுவாரு.  ன்னிக்கி தேங்காமட்டை கெழவன்தான்  அந்த வேலைய
செஞ்சிக்கிட்டிருந்தாரு.  அப்பத்தான் எங்க மூனு பேருக்கும் மூச்சே வந்திச்சி! 


ல்லாப்பிச்சை மாமாவுக்கு என்ன ஆச்சினு மூளையப்போட்டு கொழப்பிக்கிட்டு
இருந்தப்ப நெனச்சமாதிரியே பொம்பள புள்ளைங்க 'நாக்கான் பூச்சி மக்கான்'னு
எங்கக்கிட்ட பாடி கிண்டல் பண்ணி கலாட்டா பண்ணுனதுங்க.

"சரிதான் புள்ள ரொம்பத்தான் சிலிப்பிக்கிற, வாயமூடு" அப்படீனு சொன்னவுடன, 

"சரிதான் போடா"னு சொல்லிக்கிட்டே ஓடிருச்சிங்கதுக்குள்ள அழகேசன்
மணி அடிச்சிட்டான்.  


த்தியானம் வகுப்பு முடியுற நேரத்துல வாத்தியாரு எங்கள கொஞ்சநேரம் 
உக்காந்திருக்க சொன்னாருங்களுக்குத் தெரியும் எப்பவும்போல
காய்கறிங்க, மரவள்ளிக் கெழங்கு எல்லாம் 'பேப்பர்' 'பொங்கூஸ்' பண்ணி
எல்லாத்துக்கும் கொடுப்பாங்க.  மொதல்ல நாலு, அஞ்சாம்பு பிள்ளைங்களுக்கு
கொடுத்து அனுப்பிட்டு கடைசியாதான் ஆறாம்புக்கு கொடுப்பாங்க.
 


துக்கு இடையில வாத்தியாரு பேசினாரு.  "எல்லாம் நல்லா கேளுங்க, கடைசி
தவணை அரசாங்கப் பரீட்சை முடிஞ்ச உடனே பெற்றோர் தினவிழாவுக்கு
ஏற்பாடு செய்கிறோம்.  அதில எல்லோருக்கும் சில வேலைகள் பகிர்ந்து அளிக்கப்
போறேன்.  ஆசிரியர்கள் குழு அதற்கான நிகழ்ச்சிகளை தயார்செய்து வருகிறோம்.
தில 'சேரன் செங்குட்டுவன்' நாடகம் இடம்பெறும்.  செங்குட்டுவனா அழகேசனும்,
செங்குட்டுவன் மனைவி வேண்மாளாக கமலவேணியும், புலவர் வேடத்துக்கு
மணியமும் முக்கியமா நடிக்கிறதுக்கு நான் தேர்வு செய்திருக்கிறேன்.  அதற்கான
உடைகளை எல்லாம் நாங்கள் ஏற்பாடு செய்வோம்குறிப்பாக ராஜா ராணியா
நடிக்கிற ரெண்டு பேருக்கும் முறையான உடைகள் இருக்கும்ற்ற மற்ற வேடங்கள்
ஏற்று நடிக்கவேண்டியவர்கள் பெயர்களை இன்னும் இரண்டு நாட்கள்ல முடிவு
செய்கிறேன்.  ல்லோருக்கும் வசனங்கள் கொடுப்பேன்ரண்டு மூன்று வாரத்தில
மனப்பாடம் செய்யணும்"னு ஒரு குண்டத் தூக்கிப் போட்டாரு!

"சார்... சார்... ராஜா ராணியா நடிக்கிற அழகேசனுக்கும், கமலவேணிக்கும் நல்ல
உடுப்புனா புலவரா நடிக்கிற எனக்குமட்டும் நல்ல உடுப்பு இல்லையா சார்?"னு
வாத்தியார மடக்குற மாதிரி கேள்வி கேட்டேன்.

"டேய், உனக்கு என்னடா பெரிய  உடுப்பு!  இடுப்புல ஒரு வேட்டியும், தோள்ல
ஒரு துண்டும் அவ்வளவுதான்.  லை மொட்டை, நெத்தியில பட்டை, கழுத்துல
ருத்திராட்சைக் கொட்டை போதுமா?"   வாத்தியார் சொன்னதும் எல்லாரும்
சிரிச்சி கேலி பண்ணிட்டாங்க.  எனக்குத் தூக்கிவாரிப் போட்டிருச்சி!
 
ழாத கொறையா, "சார்... உண்மையிலேயே மொட்டை அடிக்கணுமா சார்?"

"தலையில ஒரு வெள்ளைத்துணி கட்டி சரிசெஞ்சிடுவோம்டா, கவலைப்படாதே"னு
சிரிச்சிக்கிட்டே சொன்னாரு.


"சார்.. சார்.. 'டான்ஸ்'சு எல்லாம் இருக்கா சார்?  இருந்தா நானும் வேலுவும்
ஜெயமதியும், நேசமணியும் 'மாமா.. மாமா.. மாமா..' பாட்டுக்கு டான்ஸ்
ஆடுறோம் சார்"னு சொன்னேன்.

"
ம்... எனக்குத் தெரியும்டா, நீ நல்லாவும் ஆடுவே, நல்லாவும் பாடுவே,
நல்லாவும் படிப்பே
னு! அதோட இந்த ரெண்டு தறுதலைங்களோட சேர்ந்து
செய்யுற விஷமத்தனத்தையும் தெரியும்டா"னு கடைசில செபஸ்தியன்
வாத்தியாரு ஒரு 'கோல்' போட்டாரு பாருங்க, நெய் ஃபாதரும், தெமர்லோ'வும்
என்னைய மொறச்சிப்பாத்தானுங்க.  அது.., 'தேவை இல்லாம ஏன்டா வாயக்கொடுத்து
எங்க பேரக்கெடுக்குற'னு சொல்றதுபோல இருந்துச்சி.

ல்லாருக்கும் 'ஸ்கூல்' தோட்டத்துல வெளைஞ்ச காய்கறிங்கள 'பேப்பர்'
'பொங்கூஸ் பண்ணி' கொடுத்தாங்க.  தேங்காமட்டை கெழவன்தான் எடுத்து
கொடுத்துக்கிட்டு இருந்தாருங்க மூனு 'பொங்கூச' மட்டும் தனியா ஒதுக்கி
வச்சிருந்தாரு நாங்க மூனுபேரும் கிட்ட போனப்ப அந்த 'பொங்கூச' எடுத்து
மொறச்சிக்கிட்டே கொடுத்தாரு.  மத்தவங்களோட 'பொங்கூச'விட கொஞ்சம்
சின்னதா இருந்துச்சி!   


பேசாம வாங்கிட்டு வீட்டுக்கு வர்றப்ப ஓடிப்போய் குண்டம்மாவோட 'பொங்கூச' 
தொறந்து காட்டச் சொன்னோம்துக்கு மூனு மரவள்ளிக்கெழங்கு, எங்களுக்கு 
ரெண்டுதான்.  துக்கு பாதி பரங்கிக்கா,எங்களுக்கு அதுல பாதிதான்.  அதுக்கு 
ஆறு மொளகா, மூனு தக்காளி, எங்களுக்கு அதுல நாலு, இதுல ரெண்டு மட்டும்தான்.   
துக்கு அவரக்கா ரெண்டு கை நெறைய பிடிக்கிற அளவுக்கு இருந்திச்சி, எங்களுக்கு 
ஒரு பிடிதான்.

 

"ஏய்.., குண்டம்மா அந்தக் கெழட்டுப்பய உனக்குமட்டும் அள்ளிக்
கொடுத்துட்டானா?  போ...போ... நல்லா திண்ணுட்டு உன்னோட பேர் மாதிரியே
குண்டா போ...!"  நெய் ஃப்பாதர் கோவத்துல ஏசிப்புட்டான்.

"டேய், எல்லாத்துக்கும் இப்படித்தான் இருந்துச்சி.  நம்பாட்டினா மத்தவங்களோட
'பொங்கூசை'யும் போய் பாரு"ன்னா.

"அந்தத் தேங்காமட்டைய விடக்கூடாதுடா, தூக்கிப்போட்டு மிதிக்கணும்டா"குண்டம்மா பக்கத்துல இருந்ததால 'தியாங் லாம்பு தெமர்லோவுக்கு ஆத்திரம் வீரமா பொங்கிடுச்சி!
 


வீட்டுக்குப்போய் அம்மாகிட்ட எல்லாத்தையும் கொடுத்திட்டு நடந்தத சொன்னேன்.
'இத மனசில வச்சிக்கிட்டு தேங்காமட்டை கெழவன எதுவும் செஞ்சிடாத'னு புத்திமதி
சொன்னாங்க.  'கடசி பரீச்ச வருது, வீணா சிக்கல்ல மாட்டிக்காத, ஒழுங்கா படிப்புல
கவனம் செலுத்தணும்'னு சொல்லிட்டாங்க.  ம்மா சொல்றதும் சரினு பட்டது!
 


ப்பவாச்சம் நெனச்சா மீன் பிடிக்கப் போவோம்.  அப்படி ஒரு சனிக்கெழம
காலையில தீம்பார் பக்கம் உள்ள ஆத்துக்கு மீன் புடிக்கப்போனோம்ப்பவும்
போல ஊக்குல ஆளுக்கு ஒரு தூண்டில் செஞ்சோம்.  கீழ கெடந்த காஞ்சிப்போன
கித்தாமரக் கிளைய நீட்டு நீட்டா ஒடிச்சோம்.  கித்தா மரத்துல இருந்து 'பீலி'
வரைக்கும் வந்து காஞ்சிப்போயி இருந்த  கித்தாப்பால மெதுவா இழுத்து ஒரு
பக்கம் கித்தா மரக் குச்சிக்கும் மறுபக்கம் தூண்டிலுக்கும் முடிச்சு போட்டோம். 

போகும்போதே மண்ணுல நாக்காம் பூச்சிய நோண்டி எடுத்து டப்பியில
போட்டுக்கிட்டோம். க்குத் தூண்டில்ல அத மெதுவா நொழச்சி ஆத்துல மீன்
புடிச்க கரையில உக்காந்தோம்.  சாணி மீனு, கெண்ட மீனு, கெலுத்தி மீனு,
விறால் மீனு, மயிர மீனுனு ஏதாச்சம் கெடைக்கும்.  கெடைச்சத மூனுபேரும்
பங்கு போட்டுக்குவோம்.
 


ன்னிக்கி ஆத்துக்கு கொஞ்சம் தூரத்துல ஓடுற கெந்தக சுடுதண்ணி ஆத்துல
தேங்காமட்டை கெழவன் குளிச்சிக்கிட்டு இருந்தாரு.  ந்த ஆத்து தண்ணி 'ஓரஞ்சு
கலர்'ல இருக்கும்.  து ஓரமா இருக்குற செடி, புல்'லு எல்லாமே அதே நெறத்துல
இருக்கும்.  நாங்க பாட்டுக்கு மீன் புடிச்சிக்கிட்டு இருந்தோம்.  திடீர்னு சுடுதண்ணி
ஆத்துக்கு அந்தாட்டம் ரெண்டு பாம்பு வளையம் வளையமா சுத்திக்கிட்டு
நின்னுச்சிங்க தப் பாக்குறதுக்குக் கிட்டப்போனோம்ளுக்கு ஒரு பெரிய
கித்தா மரத்துல ஒளிஞ்சிக்கிட்டோம்.  கீழ கெடக்குற கல்ல பொறுக்கி எடுத்து
பாம்புமேல வீசினோம்.  ஏதோ ஒரு கல்லு அதுமேல பட்டுடுச்சி.
 


தேங்காமட்டை எங்கள பாத்து, 'டேய்'ன்னாருரெண்டு பாம்பும் பிரிஞ்சி ஒன்னு
அப்படியே அந்தப்பக்கம் ஒடிப்போச்சின்னொரு பாம்பு கெந்தக சுடுதண்ணி
ஆத்துல குளிச்சிட்டு இருந்த தேங்காமட்டை கெழவனப் பாத்து சீறிப்பாஞ்சி
வந்துச்சி.  'செத்தான்டா கெழவன்'னான் நெய் ஃப்பாதர்.  வரு தப்பிச்சோம்
பொழச்சோம்னு எகிறிக் குதிச்சி மேல வந்துட்டாரு.  நாங்க புடிங்கியடிச்சி
ஓடிக்கிட்டே என்ன நடக்குதுன்னு பின்னால பாத்தோம்னோ தெரியல,
வேகமா வந்த பாம்பு கெந்தக சுடுதண்ணிக்கிட்ட வந்தோடன நின்னுடுச்சி!
ங்கேயே நின்னு அங்குட்டும் இங்குட்டும் ஓடுனது.  துக்குள்ள தேங்கா
மட்டை கெழவன் கிட்டவந்துட்டாரு.  நாங்க பக்கத்து ஆத்துல புடிச்ச மீன
எடுதுக்கிட்டு ஓடுனோம்.

"இருங்கடா.., ஒங்கள வந்து பாத்துக்குறேன்..."னு கெட்ட கெட்ட வார்த்தையா
சொல்லி திட்டோ திட்டுனு திட்டிப்புட்டாரு.
 


ன் பங்குக்குக் கெடச்ச மீனுங்கள எல்லாம் அம்மாகிட்ட கொடுத்தேன். 
'ப்ப சமச்சிட்டேன்; சாயந்திரம் சம்பால் செய்றேன்'னாங்க.  மத்தியானம்
சாப்பிட்டு அலுப்பா இருக்குனு ஒருக்களிச்சிப் படுத்திட்டேன்.  ழுந்திரிச்சப்ப
அம்மா சமச்சிட்டு பாத்திரங்கள அலம்பிட்டு இருந்தாங்க. 'ஓவர்டைம்' வேலை
முடிஞ்சி அப்பா வந்தாரு.  மூஞ்ச உம்முனு தூக்கிவச்சிக்கிட்டு இருந்தாரு!
குளிச்சிட்டு வரும்போதே என்னைய மொறச்சி பாத்தாரு!

"டேய் மணி..! தீம்பார்ல ஆத்தங்கரை பக்கம் என்னடா நடந்தது?"  ப்பா
ரொம்ப சூடா இருந்தாரு பேசாம இருந்தேன்தேங்காமட்டை போட்டுக்
குடுத்திட்டாருனு தெரிஞ்சது!  கிட்ட வந்து ஓங்கி பொடணியில ரெண்டு
போட்டாரு!  மரக்கட்ட மாதிரி அங்கேயே நின்னேன்.  அம்மா வந்து தடுத்தாங்க!

"
ண்டா!  என்னடா நடந்துச்சி"னு அம்மாவும் கேட்டாங்க!

"அவன் எப்படி சொல்லுவான்!  ந்த ரெண்டு பசங்களோட இவனும் தீம்பார்
பக்கம் போயி..."னு ஆரம்பிச்சி தேங்காமட்டை கெழவன் சொன்னத அப்படியே
அம்மாகிட்ட ஒப்பிச்சிட்டாரு!

"ஏண்டா மணி உனக்கு இந்த புத்தி; அந்தக் கெழவன எதுவும் செஞ்சிடாதனு
நான் அன்னிக்கே படிச்சி படிச்சி சொன்னேனே, கேக்கமாட்டுறியே!  ன்
தாத்தா வயசு அவருக்கு, அவரு பாட்டுக்கு இந்த வயசிலயும் தோட்டத்துல
ஏதோ செஞ்சி பொழச்சிக்கிட்டு இருக்காரு!  வேணான்டா மணி, இது நல்லது
இல்லேடா"னு அழாத கொறையா என் கைய புடிச்சிட்டு கெஞ்சினாங்க!

"இங்க பாருடா!  வெறும் படிப்பு இருந்தா மட்டும் பத்தாது, கொஞ்சமாவது
மத்தவங்கமேல ஈவு இரக்கமும் வேணும்!  எங்க வளர்ப்பு சரியில்லனு வந்துடக்
கூடாது!  அந்தப் பெரியவர பாம்பு கடிச்சி ஏதச்சும் ஆயிருந்தா...!"  ப்பா
முடிக்கல;  "பேசாம இருங்க, நடக்காததப் பத்திப் பேசி அவன பயமுறுத்தாதீங்க!
னிமே என்மவன் எந்த வம்பு தும்புக்கும் போவமாட்டான்"னு சொல்லிப்புட்டு
சாப்பாடு எடுத்து வைக்க குசினி பக்கம் போனாங்க.
 


ராத்திரி சரியான பேய் மழ பெஞ்சது.  குளிரு எடுத்து நல்லாவே  தூங்கமுடியல.
விடியக்காலையில நல்லா தூங்கிட்டேன்.  ழுந்திரிக்கும்போது மணி பத்து
ஆயிடுச்சி ப்பா கொல்லையில அவரக்கா பறிச்சிக்கிட்டு இருந்தாரு.
ஞாயித்துக்கெழம எப்போதும் கொல்லையில கொத்துறதும், பறிக்கிறதும்
கோழிக்கூடாப்ப சுத்தம் பண்றதும், அந்த சாணத்த எடுத்து கொல்லையில
இருக்குற செடி கொடிங்களுக்கு போடுறதுமே அவருக்கு பாதிநாளு போயிடும்.
சில நேரம் அப்பாகிட்ட நான் மாட்டிக்கிட்டு கோழி சாணத்த சொரண்டிக்கிட்டு
இருப்பேன்.   


சியாறிட்டு இருந்தப்போ தெமர்லோவும், நெய் ஃப்பாதரும் ரோட்டுல நின்னுக்கிட்டு கூப்பிட்டானுங்க.  ம்மாகிட்ட சொல்லிட்டு கெளம்புனேன்.  

'நேத்து சொன்னத ஞாபகம் வச்சுக்க'ன்னாங்க.  'சரி'னு தலைய ஆட்டிட்டு எட்டாங்கட்ட ஆத்துப்பக்கம் குளிக்கப்போனோம்.  


செம்மண் ரோட்டு குறுக்கால, செம்மண் கலர் கணக்கால பெரிய ஆறு ஓடுது. 
ந்த ஆத்துப் பாலத்துக்கு அடியில சுழல் இருக்குதுனு சொல்லுவாங்க.
ப்பவாச்சம்தான் இங்க குளிக்க வருவோம், பயந்துக்கிட்டு ரோட்டுப்
பாலத்துக்கு அடியில எல்லாம் போகமாட்டோம்க்கத்தில நெறைய
தென்னமரம் வரிச பிடிச்சி நிக்கும்.  தேங்காமட்டை கெழவன்  இங்கேயும்
சைக்கிள்ல வந்து தேங்காய பறிச்சி, மட்டைங்கள வெட்டி சைக்கிள்ல
கட்டி தள்ளிக்கிட்டுப் போவாரு.  க்கத்துல 'ஒய்ல் பாம்' மரங்க இருக்குறதால
பாம்பு'ங்க நடமாட்டம் அதிகமா இருக்கும்.  சில நேரத்துல ஆத்துலேயும் பாம்பு
நீந்திக்கிட்டு போகும்!  குளிச்சி முடிச்சிட்டு வீட்டுக்குப் புறப்படுற நேரத்துல
தேங்காமட்டை இன்னும் மரத்துமேல இருந்தா'தேங்காமட்டை...
கோங்காமட்டை... வவ்வவ்வவ்வே'னு கிண்டல் பண்ணிட்டு போயிடுவோம்.
 


ன்னிக்கும் ரோட்டுல நின்னு ஆத்துல குதிச்சி நீச்சலடிக்க வந்தோம்.
ராத்திரி பெஞ்ச மழையில ஆத்துல தண்ணி நெறஞ்சி ரொம்ப வேகமா
ஓடுனதுரோட்டுமேலயும் தண்ணி  ரொம்பிடுச்சிதேங்காமட்டை கெழவன்
எங்களுக்கு முன்னமே வந்து தேங்காயப் பறிச்சிப் போட்டுட்டு கீழ எறங்கி
தேங்காயில நீட்டிக்கிட்டு இருக்குற காம்பு எல்லாத்தையும் கத்தியில
வெட்டி வீசிட்டு சாக்குல போட்டுக்கிட்டு இருந்தாரு.
 


நெய் ஃப்பாதர் சொன்னான், "டேய், கெழவன் கீழ இருக்கான்.  ப்ப ஒன்னும்
செய்ய வேணாம்நாம குளிச்சிட்டு போறப்ப சைக்கிளோட  தள்ளிட்டு
ஓடிடுவோம்!"  னக்கு மனசு இல்லாட்டியும் தெமர்லோவோட சேந்து 'சரி'னு
சொன்னேன்.
 


னக்கு குதிச்சி குளிக்க கொஞ்சம் பயமா இருந்தாலும் கூட்டாளிங்க ரெண்டு
பேரும் குதிச்சவுடன நானும் குதிச்சிட்டேன்.  டுற தண்ணிய எதுத்து நீச்சல்
அடிக்க முடியல!  மூனு பேரையும் தண்ணி இழுத்துக்கிட்டு ரோட்டுப் பாலத்துக்கு
அடியில கொண்டுகிட்டு போச்சி... "ஐயோ... ஐயோ..."னு கத்துனோம்.  தேங்கா
மட்டை கெழவன் ஓடியாந்து குதிக்கிறத பாத்தேன்!
 


தெமர்லோ ஒயரமா இருந்ததால எகிறி பாலத்தப் புடிச்சிட்டான்.  தண்ணி
மூக்குலேயும் வாயிலேயும் போயி திக்கி முக்கிட்டு இருந்தேன்!  நெய் ஃப்பாதரும்
என் பக்கத்துலதான் இருந்தான்நான் அவன புடிச்சி தள்ளி வெளிய வரப்பாக்க,அவன் என்னைய புடிச்சி தள்ளி வெளிய வரப்பாக்க, ரெண்டுபேரும் சுழல்ல
மாட்டிக்கிட்டோம் போல இருந்துச்சி!  ங்கேயே சுத்திக்கிட்டு இருந்தோம்!
 

'செத்தோம்டா சாமி'னு முடிவு பண்ணிட்டேன்! ப்ப யாரோ வந்து எங்கள
காலால ரெண்டு மூனு தடவ தள்ளி விட்டாப்புல தெரிஞ்சது!
ப்படியோ பாலத்துக்கு 
வெளிய நாங்க ரெண்டுபேரும் வந்துட்டோம்.  ஆனா, தண்ணி எங்கள இழுத்துட்டுப்
போனது.  நீச்சலடிக்க எங்களுக்குத் தெம்பு இல்லாம போயிடுசசி!  ரை ஓரமா 
தெமர்லோ நின்னுக்கிட்டு ஒரு கயித்த தூக்கிப் போட்டான்.  நாங்க கயித்த இறுக்கிப் 
புடிச்சப்ப, மறுபக்கத்த அவன் நின்னுக்கிட்டு இருந்த எடத்துல இருந்த சின்ன மரத்தச் 
சுத்தி கட்டிட்டான்.  தண்ணி ஓடுற வேகத்துல அந்த சின்ன மரம் அப்படியே வளைஞ்சி ஒடிஞ்சிப்போற மாதிரி இருந்துச்சி!  தெமர்லோ அதத்தாங்கிப் புடிச்சிட்டு நின்னான்.  
ப்படியோ மெதுவா கரைக்கு வந்து சேந்தோம். ங்க ரெண்டு பேருக்கும் மயக்கம் வந்து
அங்கேயே கொஞ்சநேரம் படுத்துட்டோம்.
 


த்தம் கேட்டு முழிச்சிப் பாத்தா, அந்தப் பக்கமா போன 'டிராக்டர' தெமர்லோ
நிப்பாட்டினான்.  வடிவேலு டிரைவர்கிட்ட என்னமோ சொன்னான்.  ப்பத்தான் எங்களுக்கு
தேங்காமட்டை பத்தின ஞாபகம் வந்துச்சி!  நாங்க ரெண்டுபேரும் தெமர்லோ கிட்ட
என்னனு விசாரிச்சோம். வன் நடந்ததச் சொன்னான்.

"டேய்...!  தேங்காமட்டை கெழவன்தண்டா நம்பல காப்பாத்தினாரு;
கயிறு தூக்கிட்டு ஓடிவந்து ஆத்துல குதிச்சாருபாலத்த புடிச்சிக்கிட்டு
தொங்கிக்கிட்டு இருந்த என்ன மொதல்ல மேல தூக்கிவிட்டுட்டு கயித்த என்கிட்ட
கொடுத்துட்டு பாலத்துக்கு அடியில போனாரு.  நான் இந்தப் பக்கம் ஓடியாந்து நீங்க
ரெண்டுபேரும் வெளிய வந்தா கயித்தவீசிப் பாக்கலாம்னு நின்னேன்!  வ்ளோ
நேரம் ஆயிட்டும் தேங்காமட்டையக் காணோம்டா"னு சொன்னவுடன நாங்களும்
'டிரைவரோடசேந்து தேடுனோம்!  அதுக்குள்ள 'மோரிஸ் மைனர்' காடியில மேட்டு
லயத்துல இருக்குற செங்கோடன் மூனு பேரோட வந்து நின்னு 'என்ன நடக்குது'னு
கேட்டாரு.  டந்தத 'டிராக்டர் டிரைவர் வடிவேலு' சொன்னாரு.  ரோட்டுக்கு மேல
போன தண்ணி அப்ப லேசா கொறஞ்சி பாலத்துக்கு அடியில ஓடுனது.

"வரு சுழல்ல மாட்டிக்கிட்டார்னு நெனைக்கிறேன்"னு சொல்லிக்கிட்டே
செங்கோடன் சட்டைய கழட்டி, குதிச்சி பாலத்துக்கு அடியில போனாரு!  நாங்க
எல்லாரும் அந்தப் பக்கம் கயித்தோட காத்துக்கிட்டு இருந்தோம்.  கொஞ்ச நேரத்தில
செங்கோடன் தேங்காமட்டை கெழவன இழுத்துக்கிட்டு வந்தாரு.  கயித்த
தூக்கிப்போட்டோம்; சரியா போய் அவருமேல படுலப்படியோ எங்க பக்கம்
வராம மறுபக்கம் உள்ள கரைக்கு போயிட்டாருனசுக்குள்ள 'திக்கு திக்கு'னு
இருந்துச்சி!  "கெழவன் செத்துட்டாரு"னு செங்கோடன் சொன்னவுடனே நாங்க
மூனுபேரும் பயத்துல அழுதுட்டோம்.

வரத் தூக்கி 'டிராக்டர்' போட்டு, அவரோட சைக்கிளையும் தூக்கிப்போட்டு கூடவே
நாங்களும் அதுல போனோம்.  லயத்து வீட்ட நெருங்க நெருங்க எங்களுக்கு ரொம்ப
பயம் வந்துடுச்சி.  டிராக்டர்'ல இருந்து குதிச்சி நனைஞ்ச கோழியாட்டம் நாங்க
மூனுபேரும் அவங்கவங்க வீட்டுக்குப் போனோம்.

தேங்காமட்டை கெழவன் வீட்டுல மத்தவங்க பந்தல் போட்டுக்கிட்டு இருந்தாங்க!
ங்க வீட்டுல அப்பா என்னையப் போடு போடுனு போட்டுக்கிட்டு இருந்தாரு.
வீட்டுக்கு வந்ததுல இருந்து நெனைக்கிறப்ப எல்லாம் என்னைய தொவச்சி
எடுத்துக்கிட்டு இருந்தாரு!  ந்தத் தடவ அம்மா பேசாம பாத்துக்கிட்டு
அழுதுக்கிட்டு இருந்தாங்க!  ப்பா அடிச்ச வலியவிட தேங்காமட்டை கெழவன்...இல்லே தாத்தா செத்துப்போன வலிய நெனச்சி நெனச்சி... நெனச்சி நெனச்சி...

              *                                                *                                                      *

"மணி... மணி... சீக்கிரமா எழுந்திரிடா!  ன்னைக்கு பரீச்சைக்கு போகணும்ல;
ஏன்டா இன்னும் பைத்தியம் புடிச்சதுபோல இருக்கஅம்மா புள்ள இல்ல, வாய்யா, சீக்கிரமா போய் குளிச்சிட்டு வந்து பசியாறு!"  ம்மா அவசரப்
படுத்துனாங்க

செ
த்து ரெண்டு  மாசம் ஆனாலும் தேங்காமட்டை தாத்தாவோட நாங்க
செஞ்ச குறும்பு எல்லாம் அடிக்கடி கனவுல வந்து தொந்தரவு பண்ணிக்கிட்டே
இருக்கு!  ப்பெல்லாம் எங்களோட குறும்பு போன எடமே  தெரியல

ன்னிக்கி எப்படித்தான் பரீச்ச எழுதப்போறோமோ தெரியல!"தேங்காமட்டை தாத்தா, எங்கள மன்னிச்சிடுங்க ஐயா; எங்கள காப்பாத்துன
நீங்கதான் எங்களுக்கு காவல் தெய்வமா இருந்து ஒதவணும்."


                                                            
முற்றும்