நம் மலேசிய நாடு சுதந்திரம் அடைந்தபின் 6 பிரதமர்களைக் கண்டுவிட்டது. அவர்களில் துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக், துன் ஹுசேன் ஓன் போன்றோர் ஆட்சி காலத்தில் கம்யூனிஸ்டுகளைக் களையெடுப்பதும் பின் படிப்படியாக நாட்டின் ஈயம், ரப்பர், செம்பனை போன்ற இயற்கை வளங்களை மேலும் வளப்படுத்தி மேம்பாடடைய கடுமையாகப் பாடுபட்டார்கள்.அன்று, இந்தியர்கள் எல்லா அமைச்சுகளிலும் அரசாங்க இலாகாக்களிலும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்திற்கு மேலாகவே இருந்தார்கள்; பெரும் பொறுப்புகளிலும் இருந்தார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
1981'ல் நான்காவது பிரதமராகப் பொறுப்பெற்ற அன்றைய டத்தோசிரி டாக்டர் மகாதீர் முகம்மது அவர்கள் ஆட்சிக்கு வந்த வேகத்தில் தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் நேரத்தை ஒருங்கிணைத்து சிங்கப்பூர் அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி அரைமணி நேர மாற்றத்தை சமநிலைப்படுத்தினார். ஆஹா, எல்லா வகையிலும் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய மாமனிதர் நமக்குப் பிரதமராக வந்திருக்கிறார் என இருமாந்தோம். உண்மையைச் சொல்லப்போனால் இயற்கை வளத்தையே நம்பியிருக்கும் நம் மலேசியாவை தொழில்மயம், தகவல், தொழில்நுட்ப நாடாகவும் மாற்றியமைத்தவர் அவர்தான் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்காது. உலக அளவில் மலேசியாவை அறிமுகப்படுத்தியவர், பரந்து விரிந்த சாலைகள், குறுகிய நேரப் பயணம், உயர்ந்த கட்டிடங்கள், புதுநவீன விமான நிலையம், மேற்குத் துறைமுகம், இத்யாதி என நாட்டின் தோற்றத்தையே மாற்றிய தூரநோக்கு சிந்தனையாளர் அவர். இங்கு வந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், "மகாதீர் ஒரு மகாதீரர்" என்று பாராட்டினார். "இவர் காலத்தில் நாம் சாதிக்கமுடியாவிட்டால் வேறு எவர் காலத்திலும் நம்மால் முன்னேற முடியாது" என்று அன்றைய ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டத்தோசிரி சாமிவேலு சூளுரைத்தார்.
இப்படிப்பட்ட அந்தப் பிரதமர் நாட்டிற்கும், மலாய்க்காரர்களுக்கும் மட்டும் அபரிமிதமாகவே செய்துகொடுத்துவிட்டு, நம் இந்தியர்களை மட்டும் 'அம்போ'வென்று கவனிக்காமல் விட்டுவிட்டார் என்பதே உண்மை; என்றாலும், "ம.இ.கா. கேட்டதை நான் கொடுத்தேன்" என மகாதீரும், "அவர் கொடுக்கவே இல்லை" என சாமிவேலுவும் பதவியில் இல்லாத சமயம் ஒருவர் மீது ஒருவர் ஜாலியாகச் சொல்லிக்கொண்டார்கள். அவர் கொடுத்ததை ம.இ.கா. சுருட்டிக்கொண்டதா? அல்லது, அவர் கொடுக்கவே இல்லையா என்பது அந்த இருவருக்குமே வெளிச்சம். பாதி இந்தியனாகிய மகாதீருக்கு இந்தியர்கள்மேல் என்ன கோபமோ, எங்கெங்கெல்லாம் இந்தியர்களை வெளியேற்ற வேண்டுமோ அங்கெல்லாம் தன் நேரடிப்பார்வையால் அவ்ர்களை வெளியாக்கினார். முன்பு நான் வாழ்ந்த பிராங் பெசார் தோட்டம், சுற்று வட்டாரங்களில் இருந்த செட்ஜிலி, மெடுங்கிலி, காலவே தோட்டங்களின் பெருநிலங்கள்தான் 'புத்ராஜெயா'வாக மாறியிருக்கிறது! அதுபோல, சிப்பாங் வட்டாரத் தோட்டங்களின் பெருநிலங்களில்தான் கே.எல்.ஐ.ஏ. விமான நிலையம் உருவாகியிருக்கிறது! இப்படியாக, இந்தப்பக்கம் கிழக்கு மற்றும் மேற்கு டிவிஷன் வெஸ்ட்கன்றி தோட்டங்கள் என மேலும் பல தோட்டங்கள் இந்த சிலாங்கூர் மாநிலத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் துண்டாடப்பட்டு பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அவதிக்குள்ளாயினர்.
தோட்டத்து இந்தியர்கள் தோட்டத்திலேயே வாழ்ந்து தோட்டத்திலேயே மடிய வேண்டும்; அவர்களுக்கு வெளியுலக தொடர்புகள் இருத்தலாகாது என்பது நமது நோக்கமல்ல; அவர்களும் வெளியே வந்து தொழில்செய்து பிழைக்கவும், பொருளாதாரத்தில் முன்னேறவும்,நல்ல குடியிருப்பில் வாழவும், வீட்டுடைமையாளர்களாக ஆகவும் அரசாங்கம் அடிப்படை ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கவேண்டும்.
மாறாக, அந்தத் தோட்டங்கள் துண்டாடப்படும்போது அரசாங்கத்தின் தலைவராக இருந்த மகாதீரும் ம.இ.கா.வும் எந்தவகையிலும் அவர்களுக்கு ஆதரவாக நஷ்ட ஈட்டுத்தொகையையோ அல்லது ஒரு நல்ல இருப்பிடத்தையோ பெற்றுத்தரவில்லை. புத்ராஜெயாவாக மாறியிருக்கும் அந்த நான்கு தோட்டத்து மக்களும் சிறிய டெங்கில் பட்டணத்தில் தாமான் பெர்மாத்தா எனும் அடுக்குமாடி குடியிருப்பில் அடைபட்டுக்கிடக்கிறார்கள். அவர்கள் சென்ற சமயம் அவர்களுக்கென்று ஒரு வழிபாட்டுத்தலம் கிடையாது, விளையாட்டு மைதானம் கிடையாது, மழைபெய்தால் அந்த இடமே ஆறுபோல் காட்சிதரும். பலவீடுகளில் விரிசல், அடுக்குமாடி வீடுகளின் அஸ்திவாரம் சரியில்லாமல் ஆங்காங்கு ஓட்டை, விரிசல் என அந்த நான்கு தோட்டத்து மக்களும் புகார்மேல் புகார் கொடுத்தபின்தான் வந்துபார்த்து ஓரளவு சரிசெய்தனர். இது ஒரு உதாரணம். இப்பொழுதுதான் இன்றைய சிலாங்கூர் மாநில அரசாங்கம் வேறொரு இடத்தில் நிலம் கொடுத்து தரைவீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு செய்யவிருக்கிறது.
இப்படியாக, பாரிசான் அரசாங்கம், தோட்டத் துண்டாடல் என்றும் அரசாங்கப் பதவிகளில் உள்ள இந்தியர்களை படிப்படியாகக் குறைத்தும் வந்தது. பாரிசானின் உறுப்புக் கட்சியாக இருக்கும் ம.இ.கா. எந்தவகையிலும் தங்களின் உரிமையைக் கேட்டுப் பெறாததால் எல்லாமே நம்மை விட்டுப்போய்விட்டது. போராடித்தான் கிடைக்கவேண்டும் என்றால் நாம் என்ன அகதிகளா? இந்நாட்டின்-நம் நாட்டின் பிரஜைகள் இல்லையா? இதே பாரிசான் நேசனல் அரசாங்கம் எங்காவது பெருங்கூட்டமாக வாழும் மலாய்க்காரர்களின் கம்பத்தில் கை வைக்கமுடியுமா? அல்லது 'அம்னோ' கையை வைக்கத்தான் விடுவார்களா! இந்தியர்கள்தான் இளிச்சவாயர்கள் என்பதை நமது அரசியல் கட்சியே பல சமயங்களில் 'ஜால்ரா' போட்டு நிரூபித்துவிட்டது!
இவருடைய ஆட்சிகாலத்தில்தான் நாடளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி, இனவாதப் பேச்சுகள் அதிகரித்தன என்பதை யாராலும் மறுக்கமுடியாது! இதற்கு ஒரு தீர்வை மகாதீர் காணாமல் சால்ஜாப்பு சொல்லிக்கொண்டிருந்தார். அன்று விதைக்கப்பட்ட விதைதான் இன்று விருட்சமாகி அழிக்கமுடியாத அளவுக்கு வேர்விட்டு வளர்ந்து இனத்துவேசப் பிளவை ஏற்படுத்தித் தொடர்பிரச்சனைகளை உண்டக்கிக் கொண்டிருக்கின்றது. இன்றும் அந்த சர்வாதிகாரி நம் இந்தியர்களுக்கு எதிரியாகவே செயல்பட்டு வருகிறார். காலம் அவருக்கு தக்க பாடம் கற்பிக்கும்.
அவருடைய தொடர் நடவடிக்கையாகத்தான் இன்றைய பாரிசான் அரசாங்கமும் செயல்பட்டு வருகிறது. பிரதமர் நஜிப் தலைமைத்துவத்தில் ஒரே மலேசியா கோட்பாடு என்று சொல்லிக்கொண்டு அதை அமுலுக்குக்கொண்டுவராமல் எத்தனை எத்தனை அரசாங்க இலாகாக்கள் செயல்பட்டு வருகின்றன எனபதை அவர் அறிவாரா? அல்லது ம.இ.கா.தான் அதை கவனித்து அவரின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறதா? 'தினக் குரல்' பத்திரிகைக்கு உள்ள சமுதாய அக்கரைகூட அவர்களுக்கு இல்லையா? 2008'ஆம் ஆண்டில் சில மாநிலங்களில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் நாடாளுமன்றத்தில் அதிகமான இடங்களில் எதிர்க்கட்சியினருக்குக் கிடைத்த இடங்களும்தானே இப்பொழுது பாரிசான் அரசாங்கத்திற்கு இந்தியர்கள்மேல் அக்கரை இருப்பதுபோல் பிறப்புப் பத்திரம், அடையாளக் கார்டு, பள்ளிக்கூடங்கள், இதர சில விஷயங்களில் இறங்கி வேலை செய்கிறார்கள்! இதை அன்றே செய்துவந்திருந்தால்......! "சென்ற காலங்களில் பாரிசான் அரசாங்கம் சில தவறுகளை செய்துள்ளது" என்று நமது அமைச்சர் தான்சிரி டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்களே தொலைக்காட்சி தமிழ் செய்தியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஒரே மலேசியா' கோட்பாடு என்று சொல்லிகொண்டே ஆங்காங்கு இனத்துவேஷப் பேச்சுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன! அதைச் சொன்ன நஜிப் அரசாங்கம் வாளாவிருக்கிறது! அவருடைய பாரிசான் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் அஸிஸ் பெர்சே இணைத் தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன் அவர்களைத் தூக்கிலிடவேண்டும் என்று சொல்வாராம்; பிறகு எல்லோருடைய நிர்ப்பந்தத்தின்பேரில் மீட்டுக்கொள்வாராம்! அப்படி என்ன தேசதுரோகத்தை அந்த அம்மையார் செய்துவிட்டார்? தூய்மையான நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றுதானே விண்ணப்பம் வைக்கிறார்? அதற்காக அவரை துரோகி என்றும் அவருடைய பிரஜா உரிமையைப் பறிக்கவேண்டும் என்றும் சொல்வது நியாயமா? இதற்கு பாரிசான் அரசாங்கமோ, நஜிப்போ, போலீசாரோ அவன்மீதும் அவனைப்போல் பேசும் மற்ற பாரிசான் உறுப்பினர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்களாம்! இதில் வேடிக்கை என்னவென்றால், ம.இ.கா. தேசியத் தலைவர்முதல் இதர குட்டித்தலைவர்கள் வரையிலும், மேலும் சில அரசாங்க சார்பற்ற தலைவர்களும், "அம்பிகாவைத் தூக்கிலிடச்சொல்வதா? இந்தியர்களின் வாக்கு பறிபோகலாம்!" என்ற தோரணையில் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் அருகில் வந்துவிட்டதால் பேசும் பேச்சா இது? அப்படியாயின் தேர்தல் இல்லாத காலக்கட்டத்தில் டத்தோ அம்பிகாவைப்பற்றி அப்படி ஒரு பேச்சு வந்திருந்தால் கண்டும்காணாமல் இருந்து விடுவார்களா? இவை முறையான அறிக்கைகளா! தேசிய முன்னணிக்கு பலவீனத்தைக் கொண்டுவருவதாலோ, இந்தியர்களின் வாக்கு பறிபோகும் என்பதாலோ அறிக்கை விடுவது நியாயமல்ல! டத்தோ அம்பிகாவுக்கு சொல்லப்பட்ட அந்த வார்த்தை ஒட்டுமொத்த இந்தியர்களையே அவமதித்து இனத்துவேஷத்தை உண்டாக்கி ஒற்றுமையை சீர்குலைக்கும் என்பதால் அந்த நாடாளுமன்ற உறுப்பினரை மன்னிப்பு கேட்கவைத்து அவையிலிருந்து இடைநீக்கம் செய்யவேண்டும் என எல்லோரும் நெருக்குதல் கொடுத்திருக்க வேண்டும்.
அது அப்படி இருக்க, இதையே மலாய்க்காரர் அல்லாதவர் ஒரு மலாய்க்காரரைப் பற்றி சொல்லியிருந்தால் நடப்பதே வேறு அல்லவா? இதுதான் ஜனநாயகமா? இதுதான் இன்றைய அரசாங்கத்தின் ஒரே மலேசியா கோட்பாடா? இவர்கள் சீனர்களையும் இந்தியர்களையும் "குடியேறிகள்" என்று சொல்வார்களாம்; அதைக் கேட்டால், "சில கிறுக்கர்கள் சொல்வதையெல்லாம் செவிசாய்க்காதீர்கள்" என்று சொல்வாராம் ஆனால், அவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கமாட்டாராம்!
இந்த பாரிசான் அரசாங்கத்தில்தான் பலவற்றை நாம் இழந்துள்ளோம். அதற்கு உறுப்புக் கட்சியான ம.இ.கா. மௌனம் சாதித்தும் சால்ஜாப்பு சொல்லியும் இந்திய சமுதாயத்தை ஏமாற்றி வந்துள்ளது. அவர்கள் ஏதும் செய்யவில்லை என்று ஒட்டு மொத்தமாக குற்றம் சாற்றவில்லை; செய்ததைவிட, சாதித்ததைவிட, கோட்டைவிட்டதே அதிகம் என சொல்ல வருகிறேன். சரித்திரத்திலும் கைவைத்து நமது பெருமைகளைக் குழிதோண்டி புதைத்த பாரிசான் அரசாங்கத்தின் மீது சக உறுப்புக் கட்சி என்ற ரீதியில் ம.இ.கா. எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை; எடுத்திருந்தாலும் கடைசிவரை அதற்குத் தீர்வு காணவில்லை. மலாக்கா 'பரமேஸ்வரா' - 'இஷ்கந்தர்ஷா' என மாறியது முதல் பூஜாங் பள்ளத்தாக்கு பொக்கிஷம்வரை அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு நமது சரித்திரங்களை மறைத்து விட்டார்கள், மறைத்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
எல்லாக் காலத்திலும் இந்தியர்கள் நம் நாட்டிற்கு அதிகப்படியான விசுவாசிகளாகவும், பிரச்சனைகள் கொடுக்காமலும் வாழ்ந்து வருகிறார்கள். மண்புழுவைக்கூட துன்புறுத்தினால் அது துள்ளிக்குதிக்கும்; அந்த நிலைக்கு இந்தியர்களை சீண்டிப்பார்க்க வகைசெய்யும் காரியங்களில் பாரிசான் அரசாங்கம் சர்வாதிகாரி மகாதீர் ஆட்சி காலம்போல் செயல்பட வேண்டாம் என்பதே அனைவரின் ஒட்டுமொத்த வேண்டுகோள்.
இன்று (1.7.2012) இந்தக் கட்டுரை 'தினக் குரல்' ஞாயிறு மலர், பக்கம் 21'ல் வெளிவந்துள்ளது.

No comments:
Post a Comment