Thursday, 26 July 2012

பெண்


 பெண்
 
பெண் - உயிர்மெய்யும் மெய்யும் கலந்த
இரண்டு தமிழ் எழுத்து!
 
ஒற்றைக் கொம்பைப் போல்
ஒரு நாள் வளைத்து விடலாம்.
 
'ப' என்னும் பெட்டிக்குள்ளே
பாங்காய் அடைத்து விடலாம்.
 
நினைத்தான் ஒருவன் - மறு நாள்
மலைத்தான்!
 
'ண்'னில் உள்ள புள்ளி போல்
எட்ட நின்று...
அவள்
 
'ண' - வைச் சுற்றி சுற்றி
எழுதுதல் போலே அவனைச் சுற்றி
தலை கிறங்கச் செய்து -
சென்று விட்டாள்!
 
ஓ!... பெண் -
 
எத்தனை அர்த்தம் பொதிந்த
இயல்பான இன்தமிழ் எழுத்து!
 
பெண் - இரண்டு தமிழ் எழுத்து!




No comments:

Post a Comment