Thursday, 26 July 2012

***எய்ட்ஸ்***

"எந்தப் புற்றில் எந்தப் பாம்போ
 யாருக்குத்தான் தெரியும்?
 எந்த ஆணோ எந்தப் பெண்ணோ
 யார் அறிவார் நதிமூலம்?
 
 பெண்ணாசை ஆணாசை இயற்கை விதி
 பெறுவதிலே வேண்டும் நன்னெறி!
 விண்முட்டும் மோகத்தால் விழுவதா விதி?
 விதி மீறி விதி தவறியதற்கு இந்தக் கதி!
 
 மனமொன்றி மணம் புரிந்து வாழ்க்கையில்
 மேவுதலே கூடி முயங்குதல்!
 பிணமாகும் உடல்மீது இச்சைகொண்டு
 புணர்ந்தாலே வரும் நோய்க்கேடு!
 
 கூடி முயங்கவேண்டும் துணைவன் துணைவி
 கூடுவார் எல்லாரிடமும் கூடுதல் அநீதி!
 மூடியுள்ள உடலுக்குள்ளே குடியிருக்கும் கிருமி
 மனைவி, துணைவன், பிள்ளை என்று பரவுமேஅக் கிருமி!
 
 இந்த நோய் பற்றியவரை பற்றினால் பரவாது
 இழுக்கான முறைகேடு இருந்தால் விடாது!
 இந்த நோய் பற்றியவரை இழிவாக எண்ணாது
 இயன்ற உதவிகள் செய்தல் தவறாகாது!"
 

No comments:

Post a Comment