Thursday, 26 July 2012

தாகம்

மண்ணின் தாகத்தை
மழைத்துளிகள் தீர்த்தன..
கண்ணின் தாகத்தை
காட்சிகள் தீர்த்து வைத்தன..

பெண்ணின் தாகத்தை
பழக்கமும் பரிவும் தீர்த்தன..
பண்ணின் தாகத்தை
பாடல் வரிகள் தீர்த்தன..

அழுத சிசுவின் தாகத்தை
அம்மாவின் அணைப்பு தீர்த்தன..
தமிழுக்குள்ள தாகத்தை
வாசிக்கும் ப்ழக்கம் தீர்த்தன

நட்புக்குரிய தாகத்தை
நெஞ்சப் பரிவுகள் தீர்த்தன..
தொட்டுத் தொடரும் பழக்கத்தை
தூய அன்புகள் நிறைத்தன..

தென்றலுக்கான தாகத்தை
தியங்கிய பனிகள் தீர்த்தன..
வண்ணமலர் தாகத்தை
வண்டுகள் வருடி தீர்த்தன..

செவ்விதழ்கள் தாகத்தை
சேரும் முத்தங்கள் தீர்த்தன..
செவ்வாயின் தாகத்தை
செந்தமிழ் சொற்கள் தீர்த்தன..

என்தாகம் எதுவென்று
யாருக்குத் தெரிகிறது?
என்தாகம் தீர்ப்பவரை
எங்கே சென்று தேடுவது?

No comments:

Post a Comment