Tuesday, 6 November 2012

பெண்ணுடன் உள்ள சுகம்!

பெண்ணுடன் உள்ள சுகம்!

உன்னைப் பார்த்தபோது - என்
உள்ளம் சிரித்தது
என்னைப் பார்த்தபோது - உன்
உள்ளம் தெரிந்தது.

கண்ணைப் பார்த்தபோது - அதில்
காதல் தெரிந்தது!
மின்னிடை நடித்தபோது - எந்தன்

மூச்சும் நின்றது.

உன்னுடன் இருக்கும்போது - எனக்கு
உலகம் இனிக்கிறது
பெண்ணுடன் உள்ள சுகம் - ஒரு
போதையில் சூழ்கிறது.

தன்னையே இழக்கும் சுகம் - உன்னை
தழுவத்தான் இணைத்தது!
உன்னையே நினைக்கும்போது - தேன்
உற்றே சுரக்கிறது.

அன்னையின் பாசமெல்லாம் - வெறும்
அற்பமாய் படுகின்றது
அண்ணன் தம்பி எல்லாம் - காண
அலுப்பு சலிப்பாகின்றது.

No comments:

Post a Comment