Wednesday, 25 July 2012

*கோலங்கள் கனவுக்கோலங்கள்... (பாடல் வரிகள்)

எனது 'கனவுக்கோலங்கள்' நாவல் வெளியீட்டிற்காக, அந்தக் கதையில் உள்ள கருவை இரத்தினச் சுருக்கமாக பாடல்வழி கொண்டுவந்தேன்.  பாடலை இசையமைக்கச் செய்து, நடனத்துடன் நூல் வெளியீட்டின்போது அரங்கேறியது.

                   பாடல்

கோலங்கள்... கனவுக் கோலங்கள்...
வாழ்க்கைப் பாதையின்
ஆறுகள் கடந்த பாலங்கள்
நடந்த காலங்கள்!

தோட்டமே கதியெனக் காட்டிய
பூட்டையே உடைபட நாட்டிலே
ஒருவழி சொல்லி அந்த சீர்வழி போனான்!
மாமணியான அந்த மணிவண்ணன் மேலோன்!

ஏழையும் வாழக் கோழையும் மீள
ஓடுமே பீடை எனும் படியாக..

வாழ்விலே ஒழுங்கினைப் போற்றினால்
ஓங்கலாம் எனும் ஒரு நீதியைக்
கூறியே பாதை காட்டும் ஓர் அரும் கோலமே!
சீர்தமிழ் ஓங்க வந்து பேர் சொல்லும் நூலிதே!

ஆருயிர் தோழர் வாழ்விலோர் சீலர்
நேர்வரும் கால நிறையொளியான..

தேசியத் தோட்ட
தொழிற்சங்க நடப்பை
செவ்வெனச் சொல்லிடும்
அரும்பெரும் நூலிதே!
பயிலுவோர் கனவெல்லாம்
நனவாகி ஓங்கவே
நேர்வழிச் சென்றிட
நல்வழிக் காட்டுதே!

கோலத் தமிழ்மொழி ஓங்க - நல்ல
நூல்களைப் படைத்திடல் வேண்டும்!
இலக்கிய நறுமணம் பரவ - நூல்
பல பல வெளிவரவேண்டும்!

வாசகர் கனவு பலித்திட - இறைவா
வருக! வருக! வந்தருள் புரிக!








2 comments:

  1. முகநூலில் பதிவு செய்திருந்த இந்த பாடலைக் கேட்டுள்ளேன்.. அருமை. வாழ்த்துகள்

    ReplyDelete