Tuesday, 24 July 2012

100'’வது இலக்கியச் சோலை

பொருள்:கிள்ளான் மாவட்டத் தமிழ் வாசகர் எழுத்தாளர் இயக்கத்தின் 16'ஆம்
ஆண்டு விழா - 100'வது நிகழ்ச்சி, இலக்கியச் சோலை - 11 
கருப்பொருள்:"ஒழுக்கமே விழுப்பம்"
----------------------------------------------------------------------

ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் கிள்ளான் மாவட்டத் தமிழ் வாசகர்
எழுத்தாளர் இயக்கத்தின் இலக்கியச் சோலை விழா, இவ்வாண்டும் சிறப்பாக
நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 99 பல்வேறு
நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமையில் இந்த 100'வது
நிகழ்ச்சி எதிர்வரும் மலேசிய தினமான செப்டம்பர் 16'ஆம் நாள் ஞாயிற்றுக்
கிழமை (மறுநாளும் விடுமுறை) பிற்பகல் மணி 2.30 முதல் மாலை மணி
6.30 வரை கோலக்கிள்ளான் திருவள்ளுவர் மண்டபத்தில் (குளிர்சாதன வசதி
கொண்டது) நடைபெறவிருக்கிறது.
இந்த ஆண்டு இலக்கியச் சோலை - 11'றின் கருப்பொருள் : "ஒழுக்கமே
விழுப்பம்" இந்த தலைப்பைத்தொட்டு புதுக்கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.
நிபந்தனைகள் : உங்களுடைய கவிதைகள் 12 வரிகளுக்குக் குறையாமலும்
16 வரிகளுக்கு மேற்போகாமலும் இருத்தல் அவசியம். உங்கள் முழுப்பெயர்,
முகவரி, தொலைப்பேசித் தொடர்பு எண், மேலும் உங்கள் வருகையை கடிதத்தில்
உறுதி செய்வதோடல்லாமல் இது உங்களுடைய சொந்தப் படைப்பு என்பதனையும்
உறுதி செய்திருக்கவேண்டும். நிகழ்ச்சியில் வந்து கலந்துகொள்ள விருப்பம்
கொள்பவர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும். மேற்காணும்
நிபந்தனைகளுக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப்படும் என்று இயக்கத்தின்
செயலாளர் திரு. எஸ்.எம்.ஆறுமுகம் தெரிவித்தார். அனுப்ப வேண்டிய முகவரி:
Presiden, Persatuan Pembaca Dan Penulis Tamil Daerah Klang,
No.48, Lebuh Siput, Taman Palm Grove, 41200 Klang, Selangor.
உங்கள் படைப்புகள் செப்டம்பர் 5'ஆம் தேதிக்குள் எங்களுக்குக் கிடைக்கும்படி
அனுப்பி வைக்கவேண்டும். முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஆறுதல்
பரிசுகளை வெல்பவர்களுக்கு, முறையே ரிம200, ரிம150, ரிம100
மற்றும் ரிம50 ரொக்கப் பரிசுகளுடன் உள்நாட்டுப் படைப்பாளர்களின்
ஒரு நூலும் வழங்கப்படும். வருகையை உறுதிசெய்த மற்ற அனைத்து
பங்கேற்பாளர்களுக்கும் உள்நாட்டு எழுத்தாளர்களின் நூல்கள் வழங்கப்படும்.
நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.

நிகழ்ச்சியில் சிலாஙகூர் மாநிலத்தில், குறிப்பாக கிள்ளான், காப்பார் மற்றும்
சுற்றுவட்டாரங்களில் இருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம100 மதிக்கத்தக்க
உள்ளூர் படைப்பாளியின் சிறந்த நூல் ஒன்று பிரமுகர்களின் ஒத்துழைப்பில்
இலவசமாக வழங்கப்படும். வழக்கம்போல் பெற்றோர்களுடன் 12
வயதிற்குக்கீழ் வரும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து நேரடித் தொடர்பின்வழி (skype)
பிரபல இலக்கியவாதி ஒருவருடன் நடைபெறும் சிறப்புப் பேட்டி
அங்கம் உண்டு. வருகையாளர்கள் அதைத் திரையில் கண்டு கேட்டு
ரசிக்கலாம். மேலும் இலக்கிய உரைகள், முன்கூட்டியே எங்களை அழைத்து
உறுதிசெய்யும் வாசகர் இயக்கப் பொறுப்பாளர்களின் மேடை படைப்புகள்,
கவிதை படைப்புகள், நகைச்சுவை உரைகள், கிள்ளான் ரெங்கநாதர்
பரதாலயத்தின் சிறப்பான நடனங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகள் உங்களை
மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அமையும். பிற்பகல் 2 மணிக்கு தேநீர்
உபசரிப்பும், மாலையில் உணவும் வழங்கப்படும். பல முக்கிய
பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவிருக்கும் எங்களின் 16'ஆம் ஆண்டு விழாவிற்கு
திரளாக வந்து கலந்து சிறப்பிக்குமாறு வாசகர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய
ஆர்வலர்கள், மொழிப்பற்றுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்
இயக்கத்தின் தலைவர் திரு. பாலகோபாலன் நம்பியார்.

தொடர்புக்கு : திரு. பாலகோபாலன் நம்பியார் - 017-3356952
திரு. எஸ்.எம்.ஆறுமுகம் - 0192797219

2 comments:

  1. You have been doing a great job Bala. Congrets.
    http://kopunniavan.blogspot.com

    ReplyDelete