திருவள்ளுவர் ஞானி
உலக மாந்தர்க்கு ஒரு வழிகாட்டி - அவர்
உலக பொதுமறை தந்ததிரு வள்ளுவர் ஞானி
கலகம் இல்லாத வாழ்வுக்கு அறிவூட்டி - எந்த
காலத்தும் வாழ்வுக்கு கலங்கரை விளக்க ஒளிகாட்டி
அறம் பொருள் இன்பம் என்றே வகுத்தார் - அதனை
ஈரடியில் எழு சீரில் முடித்தார்
திறமாக அதிகாரம் நூற்று முப்பத்து மூன்று - அதில்
தடம் பார்த்து பயில குறள் பாக்கள் பத்து
அறத்துப்பால் அருந்தி அருள் நெறியோடு வாழ்க!
பொருட்பால் மாந்தி பொருளீட்டி வாழ்க!
இன்பத்துப்பாலே இல்லறமென்னும் நல்லற தர்மம்!
இணைந்த நெறிநின்று நடத்தல் பெரும் பேரின்பம்!
அற்புதம்
ReplyDeleteதெய்வப்புலவர் அல்லவா!
Deleteஅருமை!
ReplyDelete