Tuesday, 6 November 2012

வெள்ளித்திரை

வெள்ளித்திரை

கொஞ்சல்கள்
குலாவல்கள்
கொடுக்கும் முத்தங்கள்
மணம் முடித்த
மணமக்கள் ஏக்கங்கள்
ஏங்கிய பின்னர்
எழும் நெடு மூச்சுகள்

மெத்தை...
மெத்தைமேல் மெல்லிய பூக்கள்
அருகே விளக்கு,
அதுவும் அணைந்த பின்
அணைப்புக்கள் - பிணைப்புக்கள்
இப்படி அடுக்கும் அடுக்கா சம்பவங்கள்!
திரையில் தடுக்கவேண்டிய காட்சிகள்!

ஆனால் - அந்தோ!
திரையில் இவையெல்லாம் திருக்கோலம் பூண -
வண்ணத்தில் எண்ணத்தைக்
கெடுக்கும் வகையில்
காட்டும் திரைதாம்...
வெள்ளித் திரையாம்! - சினிமா
வண்ணத் திரையாம்!

No comments:

Post a Comment