Tuesday, 6 November 2012

படைத்தவன் புன்னகை!

படைத்தவன் புன்னகை!

அவன் ஆண் மகன்!
அவள் பெண் அழகி!
பார்த்தார்கள்!
சிரித்தார்கள்!
இருவரும் பேசினார்கள்
இருவரும் இணைந்தார்கள் - பின்னர்
பிணைந்தார்கள்!

கொஞ்ச நாளில்...
அவன் சொன்னான்,
"நம் குழந்தை உன்னைப் போலவே
பிறந்திருக்கிறது!"
அவள் சொன்னாள்,
"இல்லை... இல்லை...
உங்களைப் போலவேதான் பிறந்திருக்கிறது!"
படைத்தவன் மெல்ல சிரித்துக் கொண்டான்.

ஆண்டுகள் கடந்தன - ஒருநாள் அவள்,
"மூதேவி... அப்பன் புத்தி அப்படியே இருக்கு!"
மறுநாள் அவன்,
"ச் சீ!... நாயே... ராட்சசிக்குப் பிறந்தால்
ராட்சசி தானே!..."
படைத்தவன் புன்னகைத்தான்
இப்போதும்.

No comments:

Post a Comment