அலங்காரமா? இல்லை அலங்கோலமா?
இளங்கன்னியே! நின்று பதில் சொல்லம்மா!
அலைபோன்ற கருங்கூந்தல் சிவப்பானதும் - எண்ணெய்
அறியாது
நார்போல விறைப்பானதும்
மலைபோன்று உயர்ந்தோங்கிக் கூடானதும் - பேன்
மகிழ்வோடு வாழ்கின்ற வீடானதும்
கண்ணாடிச் சருகேஉன் உடையானதும் -
தொடை
காண்கின்ற நிலையாக மேல்போனதும்
முன்னாடி திறப்பேஉன் எழிலானதும் - வயிறு
மூடாது கீழ்நோக்கி அணியானதும்
கண்டோர்கள் நகைக்கின்ற உருவானதும் - வளர்
கயமைக்கே உரமூட்டும் பொருளானதும்
தண்டமிழ் நெஞ்சுக்கே தணலானதும் - அது
தருகின்ற வசைப்பாட்டின் கருவானதும்
சிந்திக்க வைக்கும் வரிகள்!
ReplyDelete