கலைஞருக்கெல்லாம் உதவிடும் கலைநிதியே - என்றும்
நிலையாக நீவீர் வாழியவே...
- கலைஞருக்கெல்லாம்
அலைகடல் அவரின் அன்புள்ளமே - இந்த
அவணியில் என்றென்றும் வாழியவே!
- கலைஞருக்கெல்லாம்
ரத்னவள்ளி அம்மையின் கொடைநெஞ்சமே
ராகத்தில் பேதமில்லா இசை உள்ளமே..
மலேசியத் திருநாட்டில் சுடர்விடும் ரத்னமே..
முத்தமிழ் கலை வளர்க்கும் அம்மா நீ வாழ்கவே
- கலைஞருக்கெல்லாம்
நாடிவரும் அன்பருக்கு உதவிடும் தாய்மடியே
தேடிச்சென்று கரம்நீட்டும் மனிதநேய மாமணியே..
கூடிவரும் நன்மையெல்லாம் கோடியாய் மாறுமே..
குவலயத்தின் புகழ் யாவும் உனைசேரும் வாழ்கவே
- கலைஞருக்கெல்லாம்
No comments:
Post a Comment