Tuesday, 24 July 2012

சித்திரா பௌர்ணமி விழா

எண்ணி லடங்காக் காவடிகள்
எழிலாய் ஆட நான்பார்த்தேன்;
எரிச்ச லூட்டும் பித்தர்களின்
குரங்கு சேட்டையும் நான்பார்த்தேன்

பன்னீர் கொண்டே அபிஷேகம்
பாங்காய் நடக்க நான்பார்த்தேன்;
படுபாவிகள் செய்யும் சீர்கேட்டை
மனம் குமுற நான்பார்த்தேன்

கோலக்கிள்ளான் ஸ்ரீசுப்ரமண்யர் தனியழகை
சித்திரா பௌர்ணமியில் நான்பார்த்தேன்;
இந்துக்கள் பலர்செய்யும் அலங்கோலத்தை
அமைதியாய் அமர்ந்து அவன்பார்த்தான்!

No comments:

Post a Comment