Thursday, 26 July 2012

தூது

தென்றலைத் தூதுவிட்டால்
அது திசைமாறிப் போய்விடலாம்
திங்களைத் தூதுவிட்டால்
அது தேய் பிறையில் மாய்ந்திடலாம்
அன்றிலைத் தூதுவிட்டால்
அது இணைதேடிப் போய்விடலாம்

மங்கையைத் தூதுவிட்டால்
அவள் மனம் மாறிப் போய்விடலாம்
மேகத்தைத் தூதுவிட்டால்
அது கலைந்தோடிப் போய்விடலாம்
ராகத்தைத் தூதுவிட்டால்
அது லயம் தேடிப் போய்விடலாம்

பாரினிலே யாருமில்லை
என் பாவையிடம் தூது செல்ல
யாரையுமே நம்பாமல்
என் இதயத்தையே தூது விட்டேன்.

No comments:

Post a Comment