Tuesday, 24 July 2012

மீண்டும் ஒருமுறை - புத்தாண்டு சிந்தனையாக.


மாட்டுக்கு வருவதில்லை மாரடைப்பு
அவை மாதாமாதம் போவதில்லை - சோதனைக்கு
காட்டெருமை சளிபிடித்து பார்த்ததில்லை
எவையும் கண்டபடி மருந்து வாங்கித் - திண்பதில்லை

கூட்டில்வாழ் பறவையிடம் குழப்பமில்லை
எவையும் குடித்துவிட்டு மரத்தடியில் - சாய்வதில்லை
நாட்டில்வாழ்  ஆறறிவைக் கண்டித்து
இங்கே நற்பண்பு காட்டுதையா - ஐந்தறிவு

மரத்தடியில் தன்கூட்டை விட்டுவிட்டு
கிளிகள் வாடகைக்கு சென்றெங்கும் - வாழ்வதில்லை
கற்பழிப்பும் கொலை திருட்டும் சூழ்ச்சிகளும்
சிங்கத்தின் குகைக்குள்ளே நடந்ததாக - படித்ததில்லை

மாறவேண்டும் மாற்றவேண்டும் - ஆறறிவு
இல்லையேல் சேர்க்காது நம்மினத்தை - ஐந்தறிவு!

No comments:

Post a Comment