அன்புத்திரு பாலகோபாலன் நம்பியார் அவர்கள் ,
பேரன்பீர் ,வணக்கம்
தங்களின் 'கனவுக் கோலங்கள்' நாவலை படித்து முடித்தவுடன், உங்களுக்கு எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், பணிச்சுமைகளின் காரணத்தால் உடனே எழுத இயலாமல் போய்விட்டது!
உண்மையில் இப்படி ஒரு நாவலை எப்படி உங்களால் எழுத முடிந்தது என்ற வியப்பு தான் முதலில் எனக்கு ஏற்பட்டது!
அதற்கு நீங்கள் ஒரு மலேசியராக இருப்பதாலோ அல்லது, மிக மிக குறைவாகவே இது போன்ற நாவல்களை நான் படிப்பதாலோ எனக்கு இந்த வியப்பு ஏற்பட்டிருக்கலாம் !
எது எப்படி இருப்பினும், நாவலை படித்து படித்து முடித்த பின்னர், இன்று வரை உங்களின் கதா பாத்திரங்கள் என் மனதில், நிழலாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
அதற்கு, நானும், அந்த கதாபாத்திரங்கள் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவித்திருப்பதனால் தானோ என்று என் மனம் எண்ணுகிறது!
பி பி. அண்ணாவை நானும் நேரில் பார்த்திருக்கிறேன்!! தோட்டப் புறங்களில், துரை மற்றும் கிராணி மார்களோடு , தொழிற்சங்கம் மோதலும்,
வேலை நிறுத்தங்களும் , நம்மவர்களே சிலர் முதலாளிமார்களோடு சேர்ந்துகொண்டு, தொழிலாளர்களுக்கு தொல்லையாய் இருந்ததும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடக் கூடியதா என்ன?
வசந்தாவுக்கு வந்தது போன்ற சந்தேகங்களும், அதனால் ஏற்படும் அவசர பேச்சு வார்த்தைகளும், கோபதாபங்களும் இன்றைக்கும் எத்தனையோ குடும்பங்களை பிளவுக்குள்ளாகி இருக்கின்றது!
ஆனால், மணிவண்ணன் போன்ற தெளிவான மனம் படைத்த கணவன்மார்கள், ஒரு நிமிடம் அவசரப் பட்டாலும், அடுத்த வினாடியே, தன்னை நிதானப் படுத்திக்கொள்ள தெரிந்த காரணத்தாலும், பல குடும்பங்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றன !
மல்லிகா, மணிவண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் உள்ளபடியே, எப்படியோ தண்ணீர்தான் பட்டு விட்டது என்றுதான் நான் படிக்கும் போது நினைத்தேன்! பிறகுதான் தெரிந்தது, அச்சில் நீங்கள் அப்படி செய்துள்ளீர்கள் என்று! எப்படி உங்களுக்கு இப்படி ஒரு சிந்தனை வந்தது என்று வியந்தேன்!
வசந்தாவுக்கும், மணிவண்ணனுக்கும் ஏற்பட்ட அந்த பிணக்கு நேரத்தில், கடந்த காலத்தைப்பற்றி வாசகர்களுக்குத் தெளிவாக படம் பிடித்து காட்டி விட்டீர்கள்!
பிராங் பெசார் தோட்டத்து சிறுவர்களைப் போல, நானும் குண்டு விளையாடியுள்ளேன்! எங்கள் தோட்டத்து நாடகக் கொட்டகையில், நாடகம் பார்த்ததும், அதே கொட்டகையில் வெள்ளைத் துணி கட்டி சினிமாப் படம் பார்த்ததும், அன்றைக்கு தோட்டத்தில் படம் என்றால், பாயையும், பிராஞ்சாவையும் தூக்கிக்கொண்டு இடம் பிடிக்க ஓடியதும், தோட்டத்து மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டதெல்லாம் என் மனதில், கடந்த கால சிந்தனையை ஏற்படுத்தியதைப் போல, கனவுக் கோலங்கள் படித்த பல வாசகர்கள் மனங்களில் ஏற்பட்டிருக்கும்!
மணிவண்ணன் போன்ற நல்ல இதயம் படைத்த மனிதர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்! மணிவண்ணன் தன் குடும்பம், பெண்டு பிள்ளை என்று மட்டும் நினைத்திருந்தால், மல்லிகாவுக்கு நிச்சயமாக உதவி இருக்க மாட்டான்!
ஒரு 'டெலி கிளார்க்' பணியாளனாக வேலையை தொடங்கி, சொந்த நிறுவனம் வைத்து நடத்தும் அளவில், மணிவண்ணனை நீங்கள் உயர்த்தியது எனக்கு ரொம்பவும் பிடிந்திருக்கிறது! அது என் சொந்த குணமாகக் கூட இருக்கலாம்! நல்லவர்களும், பிறருக்கும், சமுதாயத்துக்கும் உதவும் எண்ணம் உள்ளவர்களும் தன் சொந்த வாழ்க்கையில் நிச்சயமாக முன்னேற வேண்டும், முடியும்!
மணிவண்ணன், ரோக் மணியத்தின் மகன் கையில் கொடுத்த பத்து வெள்ளி, அவன் மனைவி மனதில் தன் பிள்ளை அதிர்ஷ்டக்காரன் என எண்ணிடச் செய்து, அதனாலேயே அவனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற சிந்தனையாலும் ரோக் மணியம் போன்றவர்கள் நல்லவர்களாக மாறும் சாத்தியம் உண்டு என்பதையும் என் மனம் எண்ணிப் பார்த்தது! சரியாக சொல்லி இருக்கிறீர்கள். முகுந்தன் போன்ற நல்லவர்களும், சந்தர்ப்ப வசத்தால்தான் பாதை தடுமாறுகிறார்கள்! அதனால் அவர்கள் வாழ்க்கையே தடம் புரண்டு விடுகிறது!
உங்கள் நாவலில், மணிவண்ணனால், முகுந்தன் குடும்பம் தப்பித்தது! எத்தனை பேருக்கு, இது போன்று மணிவண்ணன் கிடைப்பார்கள்? என்று என் மனம் கவலையில் ஆளாமலில்லை!
சார், நீங்கள் மிகச் சிறந்த எழுத்தாற்றல் கொண்டவர் என்பதை, நான் மிகவும் இரசித்தது, தனக்குப் பின்னால் விரட்டிக் கொண்டு வந்த காரை லாவகமாக மணிவண்ணன் கவிழச் செய்த காட்சியின் வர்ணனைதான்! அது என் மனதில் ஒரு திரைப் படம் போல இப்போதும் இருக்கிறது!
ஓகே சார், மிகவும் நன்றாக நாவலைப் படைத்துள்ளீர்கள்! நாவலின் ஊடே, வாழ்க்கைக்குப் பயன்படும் நல்ல கருத்துகளை சொல்லி உள்ளீர்கள்!
எல்லா அத்தியாயங்களுக்கும் திருக்குறள் பயன் படுத்தியது சிறப்பு!
இந்த நாவலை நம் மலேசிய தமிழ் மக்கள் அனைவரும் படித்து மகிழ வேண்டும்!
நீங்கள் எழுதும் அடுத்த நாவலை படிக்க வேண்டும் என்ற அவாவை உருவாக்கும் அளவில் உங்களின் கனவுக் கோலங்கள் படைக்கப் பட்டுள்ளது!
வாழ்த்துக்கள் சார் !
அன்புடன் ரெ.கோ.ராசு
இந்தக் கட்டுரை 11.7.2012 தினக் குரல் பத்திரிகையில் வந்தது

No comments:
Post a Comment