எனது 'கனவுக்கோலங்கள்' நாவலில் இடம்பெற்ற பாடல் வரிகள். இசையமைத்து, பாடலாகவும் கொண்டுவந்து நூல்வெளியீட்டின்போது நடனத்துடன் அரங்கேறியது.
பாடல்
வாழ்வளிக்கும் மரமே
வளம்மிகு சீருள்ள பால்மரமே
- வாழ்வளிக்கும் மரமே...
காலையிலே எழுந்து - கருக்கலில்
பிரட்டுமே கலைந்து
வாளி உளிப்பட்டை
பையுடன் சேர்த்து
வாகுடனே நல்ல
காண்டாவில் கோர்த்து
கீர்த்திமிகும் பால்மரமே - வெகு
நேர்த்தியான பால்மரமே
- வாழ்வளிக்கும் மரமே...
மங்கு துடைத்து வைத்து
வகையுடன் பீலிப்பால் தானெடுத்து
நெத்திக்கண் பக்கக்கண் நேராயிழுத்து
பக்குவமாய் காயம் பட்டிடாமலே
வெட்ட வந்தேன் பால்மரமே - இதோ
வந்துவிட்டேன் பால்மரமே
- வாழ்வளிக்கும் மரமே...
எத்தனை நாளைக்குத்தான்
இப்பாடு பட்டு வயிறு வளர்ப்பேன்
பண்டு என் தந்தை படிக்கவைக்காமல்
பாவி என்வாழ்வை கெடுத்துவிட்டாரே
எந்தன் மனம் நோவதைவிட
வேறு என்ன செய்வேன் பால்மரமே
- வாழ்வளிக்கும் மரமே...
குறிப்பு
'நெத்திக்கண் பக்கக்கண்' என்பதை 'நெத்திக்கோடு பக்கக்கோடு'
என்று சொல்வார்கள். பாடலைப்பாடும்போது சந்தம் சரியாக
வராததால் இசையமைப்பாளர் மாற்றினார்.
வாழ்வளிக்கும் பால் மரம்.. எங்க ஊரின் ஆரம்ப காலகட்ட நிலையைச் சொல்லும் ஒரு அற்புதமான பதிவு இது
ReplyDeleteபழையன கழிதலும் புதியன புகுதலும் சரிதான் என்றாலும், அது எல்லாவற்றிக்கும் பொருந்துவதாக இல்லை. அதுபோலவே, இதுபோன்ற சில நினைவுகள். எந்நாளும் மறக்க முடியாத வழ்வளித்த பால் மரங்களும், மரவள்ளிக்கிழங்கு செடிகளும்.
Deleteநன்றி விஜி.