Thursday, 26 July 2012

கடந்து வந்த பாதையிலே... - 3

கடந்து வந்த பாதையிலே... - 3
 
'கவிச்சுடர்' காரைக்கிழார் சொல்கிறார்.., "தமிழன் எந்த மதத்தில் இருந்தாலும், அவன் தமிழன் என்ற நிலையில் தை முதல் நாளைத்தான் 'தமிழ்ப் புத்தாண்டாகக்' கொண்டாடவேண்டும், சித்திரை முதல் நாளல்ல; அப்படி சித்திரை முதல் நாளை 'தமிழ்ப் புத்தாண்டு' எனக் கொண்டாடும் சமுதாயத்தின் மீது காறித் துப்பவேண்டும், என்றுதான் திருந்துவதோ... தொன்றுதொட்டு வந்த மடமை. இது தொடர்கதையோ அன்றி துயர்க்கதையோ! இதில் யாருக்கும் வெட்கமில்லை. செம்மறியாட்டுக் கூட்டங்களைப்போல முன்னது குழியில் விழுந்தால், பின்னால் போகும் அத்தனையும் கண்ணை மூடிக் கொண்டு விழுகின்றனவே! அது செம்மறியாட்டுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்; ஆனால் மனிதனுக்குஇன்று நமக்குள்ளும் இதுதான் நடக்கின்றது...."   இப்படியாக,    'சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா!' என்ற நீண்டதொரு கட்டுரையை 10.4.2011 ஞாயிறு மலேசிய நண்பனில் எழுதி இருக்கிறார்நல்ல பல செய்திகளையும் சொல்லி இருக்கிறார்.(!!!???)  அவருக்கு நமது வாழ்த்துகள்.

சரிஇப்போது இந்தச் செய்திக்கு வருவோம். அது என்ன, உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுதமிழன் எந்த மதத்தினராக இருந்தாலும், அவன் தமிழ்ப் புத்தாண்டு என்று வரும்போது ஒற்றுமையுடன் ஒன்றாக தை முதல் நாளை கொண்டாட வேண்டும் என்றால், வெவ்வேறு மதத்தில் இருக்கும் அதே தமிழனுக்கு ஒரே மொழியாக இருக்கும் தமிழ் மொழிக்கு ஏன் இப்படி ஒரு மதச் சார்பிலான மாநாடு?

உலக இஸ்லாமியர்களின் மாநாடு என்பது சரி; ஏற்றுக் கொள்ளலாம்உலக கிருஸ்துவர்களின் மாநாடு என்பதும் சரி, உலக இந்துக்களின் அல்லது இந்து சமய மாநாடும் சரி; இவையெல்லாம் சமய அடிப்படையில் நடைபெறும் மாநாடுகள் என்ற ரீதியில் ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால், உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு என்று சொல்வதுபோல், உலக இந்து தமிழ் இலக்கிய மாநாடு என்று இருக்கிறதாதமிழ் மொழிக்கு ஏன் மதச் சாயம்? அப்படியே ஒரு இந்து தமிழ் இலக்கிய மாநாடு என்று ஒன்று நடந்தால், ( நடக்கக் கூடாது, இனிமேலும் உருவாகக் கூடாது) இஸ்லாமியத் தமிழர்கள் அதில் இணைவார்களாஇங்கு முனைவர் குமரன், டாக்டர் சண்முக சிவா முதல் பல இலக்கியவாதிகளும் இந்த மாநாடு சம்பந்தமாக நடைபெற்ற ஏற்பாட்டுக் குழுக் கூட்டத்தில் இருக்கிறார்கள்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு / செம்மொழி மாநாடு அல்லது உலகத் தமிழ் இலக்கிய மாநாடு எனப் பொதுவாக எல்லா மதத்தைச் சார்ந்த தமிழர்களும், தமிழறிந்த மற்ற இனத்தவர்களும் கலந்து கொள்ளக் கூடிய ஒரு மொழி சார்ந்த இலக்கிய மாநாட்டிற்குப் பதிலாக இப்படி தமிழ் மொழியும் மதத்தால் தனித் தனித் தீவாகப் பிளவுபட்டுப் போகும் அவலத்திற்கு மேதாவிகளும் கொண்டுவந்து விட்டார்களே.... இது பற்றி 'கவிச்சுடர்' காரைக்கிழார் என்ன சொல்லப் போகிறார்?

மலேசிய நண்பனில் வேலை செய்துகொண்டே அதே பத்திரிகையில் வீராவேசமாக அப்படி எழுதியும் அங்குள்ள பணிமனை ஊழியர்கள் கோலாகலமாக சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடிய வேளையில், கேவலம் அவர்களையே தடுத்து நிறுத்தி (அங்குள்ள பலரும் தமிழ்ப் புத்தாண்டு என்றுதான் சொன்னார்கள்!!!???) புத்தி புகட்ட முடியாத கையாலாகாத்தனம் கொண்ட 'கவிச்சுடர்' இந்த மாநாடு பற்றி என்ன சொல்லப் போகிறார் என்று காத்திருக்கிறேன். (விஷு புத்தாண்டை ஓணம் என்று வேறு எழுதி இருக்கிறார் - நண்பனில்).

சரி..., இந்த செய்தியெல்லாம் எப்படி அவருக்குச் சென்று சேரும் என்கிறீர்களா? அது நிச்சயம் சென்று சேரும், ஆளா இல்லை!    

No comments:

Post a Comment